சிவகங்கை அருகே அரசுப்பள்ளியில் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கக்கோரி பெற்றோருடன் மாணவர்கள் போராட்டம்


சிவகங்கை அருகே அரசுப்பள்ளியில் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கக்கோரி பெற்றோருடன் மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 19 Jun 2018 10:30 PM GMT (Updated: 19 Jun 2018 8:08 PM GMT)

அரசுப்பள்ளியில் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கக்கோரி பெற்றோருடன் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை,

சிவகங்கை அருகே மேலச்சாலூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1–ம் வகுப்பு முதல் 5–ம் வகுப்பு வரை 321 மாணவ–மாணவிகள் பயின்று வருகின்றனர். அரசு விதிமுறையின்படி தொடக்கப்பள்ளியில் 10 ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும். ஆனால் மேலச்சாலூர் பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்துவருகிறது. இதன்காரணமாக மாணவ–மாணவிகள் கல்வித்திறன் பாதிக்கப்படுவதாக புகார் கூறப்பட்டதுடன், இதுதொடர்பாக மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் நேற்று மாணவர்கள், தங்களது பெற்றோருடன் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க வலியுறுத்தி பள்ளிக்கூட வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சிவகங்கை போலீசார் மற்றும் அதிகாரிகள் தகவல் அறிந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத்தொடர்ந்து மாணவர்கள், பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.


Next Story