தஞ்சை தென்னகப்பண்பாட்டு மையத்தில் நடந்த யோகா பயிற்சியில் 1,410 மாணவ-மாணவிகள் பங்கேற்பு
தஞ்சை தென்னகப்பண்பாட்டு மையத்தில் நடந்த யோகா பயிற்சியில் 1,410 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் 4-ம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தையொட்டி யோகா பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. பயிற்சியை கலெக்டர் அண்ணாதுரை தொடங்கி வைத்து யோகா பயிற்சி செய்தார்.
இதில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் பாபு, நேரு யுவகேந்திரா மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணி மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், யோகாசன பயிற்சியாளர்கள், தேசிய மாணவர் படையினர், நேரு யுவகேந்திராவுடன் இணைந்த இளையோர் மற்றும் மகளிர் மன்ற உறுப்பினர்கள், அங்கன்வாடி மைய பணியாளர்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் உள்பட 1,000-த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். காலை 6.30 மணி முதல் 7.45 மணி வரை யோகா பற்றிய விளக்கமும், அதன் பயனும் குறித்து செயல்விளக்கத்துடன் யோகா பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்தனர்.
தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் யோகா பயிற்சி முகாம் நடந்தது. இதில் போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஜெயச்சந்திரன், முருகேசன், மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள், மகளிர் போலீசார், ஆயுதப்படை போலீசார் என ஏராளமானோர் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர். தஞ்சை தென்னகப்பண்பாட்டு மையத்தில் யோகா பயிற்சி முகாம் நடந்தது. பயிற்சியை மாவட்ட கல்வி அலுவலர் ராமன் தொடங்கி வைத்தார். தென்னகப்பண்பாட்டு மைய அலுவலர் மாரியப்பன் வரவேற்றார். மைய இயக்குனர்(பொறுப்பு) ஜோசப் தைரியராஜ் மற்றும் 39 பள்ளிகளை சேர்ந்த 1,410 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர். பயிற்சியாளர்கள் அம்சத், செழியன் ஆகியோர் யோகா பயிற்சி அளித்தனர். முடிவில் அலுவலர் ராஜகோபாலன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story