கடலூர், பண்ருட்டி, கிள்ளை, சிதம்பரத்தில் விஜய் பிறந்தநாள் விழா: ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கி ரசிகர்கள் கொண்டாடினர்


கடலூர், பண்ருட்டி, கிள்ளை, சிதம்பரத்தில் விஜய் பிறந்தநாள் விழா: ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கி ரசிகர்கள் கொண்டாடினர்
x
தினத்தந்தி 23 Jun 2018 3:30 AM IST (Updated: 23 Jun 2018 1:29 AM IST)
t-max-icont-min-icon

கடலூர், பண்ருட்டி, கிள்ளை, சிதம்பரத்தில் விஜய் பிறந்தநாள் விழாவை ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கி ரசிகர்கள் கொண்டாடினர்.

கடலூர்,

நடிகர் விஜய் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் நேற்று கொண்டாடினர். கடலூர் நகர விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பாடலீஸ்வரர் கோவிலில் விஜய் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கடலூர் மாவட்ட தலைவர் சீனு தலைமை தாங்கி, அன்னதானத்தை தொடங்கி வைத்தார். நகர தலைவர் சாரதி, நகர செயலாளர் சுரேஷ், நகர நிர்வாகி முருகு, பொருளாளர் சரவணன், துணை தலைவர் சத்தியராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை செயலாளர் சுரேஷ்குமார் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ராஜசேகர், பொருளாளர் புருஷோத்தமன், துணைத்தலைவர் பச்சையப்பன், துணை செயலாளர் அன்பு, கடலூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ராஜ்குமார், நகர நிர்வாகிகள் சிவா, சுகுமார், தினகரன், ராஜா, வெற்றி, ஹரி, தேசிகன், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பண்ருட்டி தொகுதி மற்றும் அண்ணாகிராமம் ஒன்றிய விஜய் மக்கள் இயக்க இளைஞரணி சார்பில் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி மேல்பட்டாம்பாக்கத்தில் உள்ள சிவன், முருகன், வள்ளலார், பெருமாள், அம்மன் கோவில்களில் விஜய் பெயரில் சிறப்பு அர்ச்சனையும், அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி வள்ளலார் கோவிலில் நடைபெற்றது. இதற்கு பண்ருட்டி தொகுதி பொறுப்பாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். அண்ணா கிராமம் ஒன்றிய இளைஞரணி தலைவர் வேலாயுதம் முன்னிலை வகித்தார். இதனை தொடர்ந்து ஏழை, எளியவர்கள் 200 பேருக்கு இலவச வேட்டி, சேலை மற்றும் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் 300 மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் தனசேகரன், தினேஷ், கார்த்திக், கலியபெருமாள், மணிகண்டன், ராஜா, ஆனந்த், வெங்கட், கணபதி, முத்துச்செல்வம், சீனு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பரங்கிப்பேட்டை ஒன்றிய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடிகர் விஜய் பிறந்தநாள் விழா கிள்ளையில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிள்ளை கலைஞர்நகரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் ஒன்றிய தலைவர் வங்ககடல் கிள்ளை மலையரசன் தலைமை தாங்கினார். தி.மு.க. பிரதிநிதி கிள்ளை கந்தன், ஒன்றிய துணை தலைவர் சுரேஷ், நகர நிர்வாகி கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பள்ளி மாணவ–மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், பேனா, பென்சில் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் விஜயபாஸ்கர், ஆகாஷ், வீரபாண்டியன், வாசு, கவியரசன், இளங்கோ, செல்வம், மணிமாறன், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிதம்பரம் நகர விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடிகர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிதம்பரம் அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்தகுழந்தைகளுக்கு தங்கமோதிரம், குழந்தைகளுக்கான ஆடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு நகர செயலாளர் எஸ்.கென்னடி தலைமை தாங்கினார். நகர பொருளாளர் கோபி, நகர ஒருங்கிணைப்பாளர் ரஹமத், நகர அமைப்பாளர் விவேக், தொண்டரணி நிர்வாகிகள் சங்கர், விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விஜய் மக்கள் இயக்க தலைவர் அருண்ராஜ், சட்ட ஆலோசகர் வக்கீல் மணிகண்டன் ஆகியோர் கலந்துகொண்டு தங்கமோதிரம் அணிவித்து, குழந்தைகள் ஆடைகள் அடங்கிய பொருட்களை வழங்கினர். முன்னதாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து, முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. குருவாயூர் தெருவில் உள்ள நகராட்சி பள்ளியில் மாணவ–மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அரசு மருத்துவமனையில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் 44 பேர் ரத்ததானம் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் சிதம்பரம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் தமிழரசன், நகர துணைத்தலைவர் அபுபக்கர், நகர இணை செயலாளர் கோபி, நகர நிர்வாகிகள் பிரபாகரன், சின்னமணி, ஆகாஷ், சுதாகர், கார்த்தி, யோகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story