மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தி.மு.க.வினர் சாலை மறியல்-ஆர்ப்பாட்டம், 91 பேர் கைது
மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 91 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்,
நாமக்கல் மாவட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு நடத்த சென்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தினர். இதையடுத்து போராட்டம் நடத்திய தி.மு.க.வினரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இதை கண்டித்து நேற்று சென்னையில் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த சென்ற செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.
மு.க.ஸ்டாலின் கைது நடவடிக்கையை கண்டித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்ய கோரியும் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காட்டுமன்னார்கோவில் கச்சேரி ரோட்டில் முன்னாள் அமைச்சரும், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஒன்றிய செயலாளர் முத்துசாமி, நகர செயலாளர் கணேசமூர்த்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன், நிர்வாகிகள் பாஸ்கர், சுப்பிரமணியன், மாறன், சுபகணேசன், கல்யாணசுந்தரம், குமராட்சி முன்னாள் ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், பூக்கடை செந்தில், ராஜேந்திரன், ஜெயராமன், வைரக்கண்ணு, சொர்ணம் அறிவழகன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் விஜயராகவன், நகர இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் கடலூரில் நகர தி.மு.க.வினர் கட்சி அலுவலகத்தில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, சில்வர் பீச் ரோடு சிக்னல் அருகில் பாரதிசாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.
இதற்கு நகர செயலாளர் கே.எஸ்.ராஜா தலைமை தாங்கினார். மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் இள.புகழேந்தி, மாவட்ட பிரதிநிதி கோவலன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சுந்தர், பாலாஜி, நகர பொருளாளர் சலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நகர இளைஞரணி செயலாளர் இளையராஜா, வி.ஆர்.அறக்கட்டளை நிறுவனர் விஜயசுந்தரம், நகர இளைஞரணி நிர்வாகிகள் ஜெயச்சந்திரன், பிரசன்னா, பாஸ்கர், ஜெயசீலன், மீனவரணி பரந்தாமன், ஒன்றிய நிர்வாகிகள் மணிமாறன், ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்கள் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் கோஷங்களை எழுப்பினர். இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, மறியலில் ஈடுபட்ட 71 பேரை கைது செய்து பாரதிசாலையில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து விருத்தாசலம் கடைவீதியில் நகர துணை செயலாளர் நம்பிராஜன் தலைமையில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட ஆதிதிராவிடர் நலக்குழு மாவட்ட அமைப்பாளர் ராமு, மாவட்ட இளைஞரணி கணேஷ்குமார், நகர இளைஞரணி பொன்கணேஷ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் வக்கீல் அருள்குமார், சிங்காரவேல், வள்ளலார் குடில் இளையராஜா, மாவட்ட பிரதிநிதி ஆட்டோ பாண்டியன், வர்த்தகர் அணி கதிரவன், வக்கீல் அணி ரவிச்சந்திரன் உள்பட 20 பேரை கைது செய்து அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
திட்டக்குடி பஸ் நிலையத்தில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் திடீரென அவர்கள் அந்த பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த திட்டக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அனைவரும் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.
இதில் மங்களுர் ஒன்றிய செயலாளர் பட்டுர் அமிர்தலிங்கம், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், அவை தலைவர் தங்கமணி, பொருளாளர் கோவிந்தராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாண்டு ரெங்கன், சட்டமன்ற உறுப்பினரின் நேர்முக உதவியாளர் அன்பு, இளைஞரணி மற்றும் தகவல் தொழில் நுட்ப அணியினர் கலந்து கொண்டனர்.
கங்கைகொண்டான் பேரூர் கழக தி.மு.க. செயலாளர் சதாசிவம் தலைமையில் மந்தாரக்குப்பம் பி.எஸ்.என்.எல். எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கம்மாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் திருமாவளவன், பேரூர் கழக பொருளாளர் அப்பாஸ் உள்பட பலர் கலந்து கொண்டு மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

Related Tags :
Next Story