மு.க.ஸ்டாலின் கைதை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தி.மு.க.வினர் சாலை மறியல் 207 பேர் கைது
மு.க.ஸ்டாலின் கைதை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 207 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
நாமக்கல்லில், தமிழக கவர்னர் ஆய்வு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க கோரியும் சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மாநில விவசாய அணி துணை செயலாளர் வெங்கடேசன், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், நகர செயலாளர் நவாப், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், கோவிந்தசாமி, கோவிந்தராசன், சுப்பிரமணி, காவேரிப்பட்டணம் பேரூர் செயலாளர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்கள் பரிதாநவாப், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் வெங்கட்டப்பன், துணை அமைப்பாளர்கள் ஆறுமுகம், துரைசாமி மற்றும் கடலரசுமூர்த்தி, திருமலைச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க.வினரை விடுதலை செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ராயக்கோட்டையில் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதற்கு மேற்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளரும், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான முருகன் தலைமை தாங்கினார். ஒன்றிய பொறுப்பாளர் கணேசன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் சின்னராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் அரியப்பன், எம்.சின்னபையன், முன்னாள் நகர செயலாளர் கே.என்.ஆர்.நாகராஜ், பி.இ.டி. நாகராஜன் மற்றும் ஜெயராமன், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் குமரேசன், சந்திரன், பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேப்பனப்பள்ளியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ரகுநாத் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் பொதுக்குழு உறுப்பினர் சின்னசாமி, பொருளாளர் ஜெயராமன், கருணாகரன், சேகர், நரசிம்மன், சிவகுமார், அப்துல்கலாம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் தளி ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. தலைமையில் நேற்று ஓசூர் பஸ் நிலையம் அருகே தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில், மேற்கு மாவட்ட அவை தலைவர் யுவராஜ், ஓசூர் நகர பொறுப்பாளர் எஸ்.ஏ.சத்யா, சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாநில துணை செயலாளர் விஜயகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், நகர பொருளாளர் சென்னீரப்பா, மாவட்ட பிரதிநிதி சரவணன், தொண்டரணி துணை அமைப்பாளர் முல்லை சேகர் உள்பட 60 பேரை போலீசார் கைது செய்தனர். இதே போல மத்தூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி உள்ளிட்ட பகுதிகளிலும் மறியல் போராட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக மொத்தம் 207 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Tags :
Next Story