மலர்களில் மலரும் கலைவடிவங்கள்
பூக்கள், இதழ்கள், இலைகள், காய்கறிகள், தானியங்களை கொண்டு அழகிய உருவங்களை உருவாக்குகிறார், சுபாஷினி சந்திரமணி. அவை பார்ப்பதற்கு 3டி சாயலில் மாறுபட்ட கண்ணோட்டங்களில் மிளிர்கின்றன.
நடனமாடும் மங்கைகள், ஆரஞ்சு நிற கூந்தல் கொண்ட பெண், மலரை ரீங்காரமிடும் வண்டுகள், இயற்கையின் எழில் கொஞ்சும் கேரள படகு வீடு, விலங்குகள், பறவைகள், மலர்களால் உருவான வீணை என விதவிதமான கலைப்படைப்புகளை தனது கைவண்ணத்தில் மெருகேற்றுகிறார். அவை ஓவியங்களா? புகைப்படங்களா? என பார்ப்பவர்களின் கண்களை குழப்பத்தில் வசீகரிக்க வைக்கின்றன.
பெங்களூருவை சேர்ந்த சுபாஷினி கவிஞர், எழுத்தாளர், புகைப்பட கலைஞர் என பன்முகம் கொண்டவர். ஓவியத்தின் மீதும் ஈடுபாடு கொண்டவர். இயற்கையின் அழகை கவிதையாக வடிக்கும் பாங்கும், புகைப்பட கலை ஆர்வமும் சுபாஷினியின் கைவண்ணங்களில் வர்ண ஜாலமிடவைக்கிறது. மலர்களின் இதழ்களை கொண்டு இப்படியெல்லாம் உருவங்களை உருவாக்க முடியுமா? என ஆச்சரியப்பட வைக்கிறார். தன்னுடைய படைப்புகளை நீலவானம் என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பலருடைய கவனத்தை ஈர்க்க வைக்கிறார். இவருடைய கலை நுணுக்கம் 100-க்கும் மேற்பட்ட விதவிதமான படைப்புகளை கண்களுக்கு விருந்தாக்குகிறது. ஒவ்வொரு கலைப்படைப்பும் ஒவ்வொரு விதத்தில் புதுமைப்படைக்கிறது.
‘‘நான் ஒரு பெண்ணின் உருவத்தை ஓவியமாக வரைந்தேன். அந்த ஓவியம் தான் விதவிதமான வடிவங்களில் படைப்புகளை உருவாக்கும் எண்ணத்தை தோற்று வித்தது. எங்கள் வீட்டு தோட்டத்தில் பூக்கும் பூக்கள் உதிரும்போது ஒவ்வொரு வடிவத்தை நினைவு படுத்தும். பூக்கள் மட்டுமல்ல காய்ந்த சருகுகள் கூட அழகானவை. அவற்றை ஒவ்வொருவரும் பார்க்கும் விதத்தை பொறுத்து வெவ்வேறு உருவங்களின் சாயல் வெளிப்படும்.
எங்கள் வீட்டுத் தோட்டத்தில் நேரத்தை செலவிடும்போது கண்களுக்கும், இதயத்திற்கும் புத்துணர்ச்சி கிடைக்கும். மலர்கள் என்னிடம் பேசுவது போன்ற உணர்வு ஏற்படும். ஒவ்வொரு பூக்களும் மலர்ந்து பிரகாசமாக ஜொலித்து உதிர தொடங்கும்போது தங்களது சொந்த கதைகளை என்னிடம் கூறுவது போல் தோன்றும்.
சிவப்பு, மஞ்சள், வெள்ளை என ஒவ்வொரு நாளும் பல்வேறு நிறத்தில் பூக்கள் மலர்கின்றன. அவை தனிப்பட்ட முறையில் என்னிடம் முறையீடு செய்வதாக உணர்கிறேன். அவற்றிற்கு என் கைவண்ணத்தில் உருவங்கள் கொடுத்திருக்கிறேன். இத்தகைய கலைப் படைப்புகள் என்னுடைய படைப்பாற்றல் பயணத்திற்கு புத்துணர்ச்சியூட்டுவதாக அமைந்திருக்கின்றன’’ என்று மனம் பூரிக்கிறார்.
சுபாஷினி தன்னுடைய தோட்டத்தில் மரங்கள், காய்கறி செடிகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட பூக்கும் தாவரங்களை வளர்க்கிறார். அவை அவருடைய கலைப்படைப்புகளுக்கு உத்வேகம் கொடுக்கின்றன.

Related Tags :
Next Story