சாப்ட்வேர் என்ஜினீயர் வீட்டில் 56 பவுன் நகை கொள்ளை மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு
ஓசூர் அருகே சாப்ட்வேர் என்ஜினீயர் வீட்டில் 56 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பேடரப்பள்ளி நந்தவனம் லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ். இவர் பெங்களூருவில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய தாயார் அமுதேஸ்வரி (வயது 50). இந்த நிலையில், யுவராஜ் கடந்த 24-ந் தேதி நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ள தனது மனைவி மற்றும் குழந்தையை பார்ப்பதற்காக சென்று விட்டார். இதனால் அமுதேஸ்வரி மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அமுதேஸ்வரி வீட்டை பூட்டி விட்டு தனது மகள் வீட்டிற்கு சென்று சென்று விட்டார். நேற்று காலை அமுதேஸ்வரி மீண்டும் வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டில் படுக்கை அறையின் பின்புறமாக உள்ள ஜன்னல் கம்பிகள் உடைந்தும், வளைந்தும் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த துணிமணிகள் உள்ளிட்ட பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 56 பவுன் நகைகளும் காணவில்லை.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அமுதேஸ்வரி மற்றும் அவரது மகள் அம்சவேணி ஆகியோர் இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது வீடு பூட்டி இருப்பதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் ஜன்னல் கம்பிகளை உடைத்தும், வளைத்தும் உள்ளே புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.13 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story