விமான நிலையத்தில் ரூ.15 கோடி போதைப்பொருள் பறிமுதல்


விமான நிலையத்தில் ரூ.15 கோடி போதைப்பொருள் பறிமுதல்
x
தினத்தந்தி 29 Jun 2018 4:23 AM IST (Updated: 29 Jun 2018 4:23 AM IST)
t-max-icont-min-icon

மும்பை விமான நிலையத்தில் ரூ.15 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

மும்பை,

மும்பை விமான நிலையத்தில் பார்சல் மூலம் அதிகளவில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் அதிகாரிகள் விமான நிலைய கூரியர் டெர்மினலுக்கு சென்று அங்கு இருந்த பார்சல்களை பிரித்து பார்த்து சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அங்கு இருந்த பார்சலில் 30 கிலோ எடையுள்ள மெத்தகுலோன் என்ற போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.15 கோடி ஆகும். இதுபோல ரூ.65 லட்சம் மதிப்புள்ள 75 ஆயிரம் வயகரா மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த போதைப்பொருள் மற்றும் மாத்திரைகளை வெளிநாட்டிற்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.

இது குறித்து அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து பார்சல் அனுப்ப முயன்ற நபர் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story