போலீசார் தாக்கியதை கண்டித்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
சிவகங்கையில் போலீசார் தாக்கியதை கண்டித்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை,
சிவகங்கையில் உள்ள அரசு மன்னர் துரைச்சிங்கம் கலைக்கல்லூரி இளங்கலை மூன்றாமாண்டு படித்து வரும் மாணவர் அருண். இவர் மானாமதுரையில் இருந்து பஸ்சில் கல்லூரிக்கு வரும் வழியில் மானாமதுரை சிப்காட் போலீசாரால் தாக்கப்பட்டாராம். இதை கண்டித்து நேற்று காலை சிவகங்கை அரசு மன்னர் துரைச்சிங்கம் கல்லூரி வளாகத்தில் 800–க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த போராட்டத்தை தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் 10பேர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனை சந்தித்து புகார் அளித்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் உறுதியளித்ததை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
Related Tags :
Next Story