சாலை விபத்தில் கால் எலும்பு சிதைவு: அரசு டாக்டருக்கு ரூ.5½ லட்சம் நஷ்டஈடு
சாலை விபத்தில் கால் எலும்பு சிதைவு ஏற்பட்டதில் அரசு டாக்டருக்கு ரூ.5½ லட்சம் நஷ்டஈடு தொகையினை மதுரை தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் 7½ சதவீத வட்டியுடன் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
விருதுநகர்,
சிவகாசியை சேர்ந்தவர் டாக்டர் அமர்நாத்(வயது 35). இவர் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்தார். கடந்த 14.9.2013–ல் இவர் சிவகாசியில் இருந்து இருசக்கர வாகனத்தில் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று கொண்டிருந்தார். விருதுநகர் ரெயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த வேன் மோதியதில் டாக்டர் அமர்நாத்துக்கு கால் எலும்பு சிதைந்தது. இதனை தொடர்ந்து டாக்டர் அமர்நாத் நஷ்டஈடு கோரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி பரிமளா, விபத்தில் காயம் அடைந்த டாக்டர் அமர்நாத்துக்கு ரூ.5 லட்சத்து 53 ஆயிரம் நஷ்டஈடு தொகையினை மதுரை தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் 7½ சதவீத வட்டியுடன் வழங்க உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story