ஈரோட்டுக்கு 8,260 புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்தன


ஈரோட்டுக்கு 8,260 புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்தன
x
தினத்தந்தி 30 Jun 2018 4:30 AM IST (Updated: 30 Jun 2018 3:50 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டுக்கு 8 ஆயிரத்து 260 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன.

ஈரோடு,

சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், ஈரோடு மாநகராட்சி காமராஜ் மேல்நிலை பள்ளிக்கூடம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.

இந்தநிலையில் ஈரோடு மாவட்டத்திற்கு தேவையான கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் மூலமாக தயாரிக்கப்பட்டது. இந்த எந்திரங்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஈரோட்டிற்கு 6 கன்டெய்னர் லாரிகளில் கொண்டு வரப்பட்டன.

புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஈரோடு கொல்லம்பாளையத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலை பள்ளிக்கூட வளாகத்தில் உள்ள அறையில் பாதுகாப்பாக வைப்பதற்காக கொண்டு செல்லப்பட்டது. ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர், ஆர்.டி.ஓ. நர்மதாதேவி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் புதிய வாக்குப்பதிவு எந்திரங்கள் லாரிகளில் இருந்து இறக்கப்பட்டு அறைகளில் அடுக்கி வைக்கப்பட்டன. மொத்தம் 8 ஆயிரத்து 260 வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. இதில் 2 ஆயிரத்து 910 கட்டுப்பாட்டு எந்திரங்கள் உள்ளன.

அதன்பின்னர் எந்திரங்கள் வைக்கப்பட்ட அறை பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டது. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

Next Story