31–ந் தேதிக்குள் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும் தூத்துக்குடி வருமான வரித்துறை துணை ஆணையர் கார்த்திக் தகவல்


31–ந் தேதிக்குள் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும் தூத்துக்குடி வருமான வரித்துறை துணை ஆணையர் கார்த்திக் தகவல்
x
தினத்தந்தி 30 Jun 2018 8:30 PM GMT (Updated: 30 Jun 2018 2:08 PM GMT)

வருகிற 31–ந் தேதிக்குள் வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும் என்று தூத்துக்குடி வருமான வரித்துறை துணை ஆணையர் கார்த்திக் தெரிவித்தார்.

தூத்துக்குடி,

வருகிற 31–ந் தேதிக்குள் வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும் என்று தூத்துக்குடி வருமான வரித்துறை துணை ஆணையர் கார்த்திக் தெரிவித்தார்.

விழிப்புணர்வு கூட்டம்

தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கம் சார்பில், வருமான வரி குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு சங்க தலைவர் ஜோ பிரகாஷ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் மயில்வேல் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி வருமான வரித்துறை துணை ஆணையர் கார்த்திக் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

வருமான வரி

வருமான வரி ரிட்டன் வருகிற 31–ந் தேதிக்குள் தாக்க செய்ய வேண்டும். தவறினால் ரூ.5 ஆயிரம் அபராதம் செலுத்தி 31.12.18–க்குள் வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்து கொள்ளலாம். அதன்பிறகும் தாக்கல் செய்ய தவறும் பட்சத்தில் ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்தி 31–03–19–க்குள் வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்து கொள்ளலாம். காலதாமதமாக வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்பவர்களுக்கு வருமானவரி செலுத்தப்பட்ட தொகை திரும்ப பெறுவதாக இருந்தால், அவர்களுக்கு வட்டி விகிதம் மிகவும் குறைவாகத்தான் கிடைக்கும். தணிக்கையாளர்கள் தணிக்கை செய்த பிறகு வருடாந்திர கணக்கு பட்டியல்களை பெறக்கூடிய தனியார் கம்பெனிகள், தொழிற்சாலைகள் குறிப்பிட்ட காலக்கெடு முடிந்த பிறகும் தாக்கல் செய்ய தவறினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று வருமானவரி விதிமுறைகளில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து சங்க உறுப்பினர்கள் சிறை தண்டனைக்கு உரிய விதிமுறையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் சங்க முன்னாள் தலைவர் ஏ.வி.எம்.மணி, செயற்குழு உறுப்பினர்கள் பிரின்ஸ் கிப்ட்சன், கிரகராஜ், கனிராஜ், நிர்வாக செயலாளர் மாரியப்பன், வருமான வரித்துறை அதிகாரிகள் ஜான் ஜெபத்துரை, குணசேகர், ஜெயசங்கர், மோகன்தாஸ், சுப்பிரமணியன், ரபேல் மற்றும் சங்க உறுப்பினர்கள், பட்டய கணக்காளர்கள், கணக்கர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story