ரூ.2¾ கோடி மதிப்பில் மானிய விலையில் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் அதிகாரி தகவல்
தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.2¾ கோடி மதிப்பில் மானிய விலையில் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன என அதிகாரி தெரிவித்தார்.
கும்பகோணம்,
வேளாண்மை பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளர் சி.எழிலன், கும்பகோணம் அருகே களம்பரத்தில் மற்றும் திருவிசநல்லூர் ஆகிய பகுதிகளில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.28 லட்சத்தில் டிராக்டர், வைக்கோல் கட்டும் எந்திரம், கல்டிவேட்டர், ரோட்டாவேட்டர், நடவுஎந்திரம் உள்ளிட்ட கருவிகள் வழங்கப்பட்டுள்ளதையும், திருவிசநல்லூரில் பண்ணைகுட்டைகள் அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வேளாண்மை எந்திரமயமாக்கல் உப இயக்கம் மற்றும் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உழுவைகள், பவர் டில்லர், நடவு எந்திரம், கதிர் அடிக்கும் எந்திரம், களை எடுக்கும் எந்திரம், சுழல் கலப்பைகள், நிலம் சமன்படுத்தும் கருவிகள், தெளிப்பான்கள் மற்றும் இதர கருவிகள் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் 2017-2018-ம் நிதியாண்டில் 238 எந்திரங்கள் ரூ.2 கோடியே 79 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பீட்டில் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் கும்பகோணம் பகுதியில் குறுவை மற்றும் சம்பா சாகுபடி செய்யும் விவசாயிகள் எந்திரங்களை பயன்படுத்தி சாகுபடி செலவுகளை குறைக்கலாம்.
2017-2018-ம் ஆண்டில் 90 சதவீத மானியத்தில் விவசாயிகளின் 10 சதவீத பங்களிப்புடன் பண்ணை குட்டைகள் அமைக்கும் திட்டம் காவிரி பாசன பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது, வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளர்கள் எல். அய்யப்பன், எஸ். ஞானசம்பந்தம், ஜி.செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story