வாய்மேடு அருகே குழாயில் பழுது ஏற்பட்டு வீணாகும் குடிநீர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
வாய்மேடு அருகே குழாயில் பழுது ஏற்பட்டு குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாய்மேடு,
தமிழகத்தில் பருவகால மாற்றத்தின் காரணமாக தற்போது நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. குறிப்பாக நாகை மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, பொதுமக்கள் போராட்டம் நடத்தும் சூழ்நிலையில் உள்ளனர். பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குழாய்கள் அமைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதைப்போல நாகை மாவட்டம் வாய்மேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குழாய்கள் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதிகளுக்கு வரும் குழாய் வாய்மேட்டை அடுத்த செங்காத்தலை பகுதி வழியாக அமைக்கப்பட்டுள்ளது.
செங்காத்தலை பாலம் அருகில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் கடந்த சுமார் 6 மாதங்களுக்கு மேலாக பழுது ஏற்பட்டு குடிநீர் வீணாக ஓடுகிறது. இந்த குழாயில் இருந்து வெளியேறும் தண்ணீர் பாலத்தின் கீழ் தேங்கி குட்டைபோல் காட்சியளிக்கிறது. இதைப்போல வாய்மேடு கடைத்தெருவில் அமைக்கப்பட்டுள்ள குழாயிலும் பழுது ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. தற்போது வேதாரண்யம் பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் பொதுமக்களுக்காக வழங்கப்படும் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக குடிநீர் வீணாகிறது. எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் உடனே குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள பழுதை சீரமைத்து பொதுமக்களுக்கு தடையின்றி சீரான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், தொடர்ந்து குடிநீர் குழாய்களை பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story