மாவட்ட செய்திகள்

கோவிலில் ஐம்பொன் சிலைகள் கொள்ளை: 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் சென்னையில் கைது + "||" + Fifteen statues robbed in the temple: Arrested in Chennai for 13 years

கோவிலில் ஐம்பொன் சிலைகள் கொள்ளை: 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் சென்னையில் கைது

கோவிலில் ஐம்பொன் சிலைகள் கொள்ளை: 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் சென்னையில் கைது
பழவூர் நாறும்பூநாதர் கோவிலில் 13 ஐம்பொன் சிலைகள் கொள்ளைபோன வழக்கில் 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
கும்பகோணம்,

நெல்லை மாவட்டம் பழவூரில் பிரசித்தி பெற்ற நாறும்பூநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2005-ம் ஆண்டு 13 ஐம்பொன் சிலைகள் கொள்ளை போனது. இந்த வழக்கில் சுபாஷ் சந்திரகபூர், வல்லப பிரகாஷ், ஆதித்யா பிரகாஷ், தீனதயாளன் உள்ளிட்ட 18 பேர் மீது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சுபாஷ் சந்திரகபூர், வல்லப பிரகாஷ், ஆதித்யா பிரகாஷ், தீனதயாளன் உள்பட 10 பேரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த 2 பேரை போலீசார் தேடிவந்தனர்.


இந்த வழக்கில் தொடர்புடைய தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா பரமதேவன்பட்டியை சேர்ந்த பரமதுரை(வயது 42), கடந்த 13 ஆண்டுகளாக போலீசாரின் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில் சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் பரமதுரை இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் சென்னைக்கு சென்று கோயம்பேடு பஸ் நிலையத்தில் நின்ற பரமதுரையை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பரமதுரையை போலீசார் நேற்று கும்பகோணத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

தொடர்ந்து அவரை போலீசார் கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பரமதுரையை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தர விட்டார். இதைத்தொடர்ந்து அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் திருச்சிக்கு கொண்டு சென்று மத்திய சிறையில் அடைத்தனர்.

இது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கூறியதாவது:-

நெல்லை மாவட்டம் பழவூரில் உள்ள நாறும்பூநாதர் கோவிலில் கொள்ளை போன பல கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலைகளில் ஆடல் நடராஜர், சிவகாமி அம்மன், காரைக்கால் அம்மையார், மாணிக்கவாசகர், கிருஷ்ணர், அஸ்திர தேவர், வெயில்காத்த அம்மன், கோமதி அம்மன், சுப்பிரமணியர் உள்ளிட்ட 9 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இதில் நடராஜர் சிலை மட்டும் ரூ.15 கோடி மதிப்புள்ளது. கைது செய்யப்பட்ட பரமதுரை மீது சிலை கடத்தல் வழக்கு மட்டுமின்றி பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர். 


தொடர்புடைய செய்திகள்

1. நெல்லை கோவிலில் ரூ.24 கோடி சிலை கடத்தல் வழக்கு: திருச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கைது
நெல்லை கோவிலில் ரூ.24 கோடி மதிப்புள்ள சிலைகள் கடத்தப்பட்ட வழக்கில் திருச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கைது செய்யப்பட்டார். கைதான அவரை கும்பகோணம் கோர்ட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆஜர்படுத்தினர்.
2. சிலைகள் ஆய்வு குறித்த அறிக்கை ஐகோர்ட்டில் ஒப்படைக்கப்படும் தொல்லியல் துறை அதிகாரி பேட்டி
சிலைகள் ஆய்வு குறித்த அறிக்கை ஐகோர்ட்டில் ஒப்படைக்கப்படும் என திருவாரூரில் தொல்லியல் துறை தென்மண்டல இயக்குனர் நம்பிராஜன் கூறினார்.
3. கரூரில் துணிகரம்: அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை
கரூரில் அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4. டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கி ரூ.2½ லட்சம் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை
சுசீந்திரம் போலீஸ் நிலையம் அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கி ரூ.2½ லட்சம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
5. கன்னியாகுமரியில் துணிகரம் : கிறிஸ்தவ ஆலயத்தில் 18 பவுன் நகை கொள்ளை - கோவிலின் உள்ளே பதுங்கி இருந்து மர்ம நபர் கைவரிசை
கன்னியாகுமரியில் புனித அலங்கார உபகார மாதா ஆலயத்தில் 18 பவுன் நகைகள் கொள்ளை போயின. கோவிலின் உள்ளே பதுங்கி இருந்து கைவரிசை காட்டிய மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-