மாவட்ட செய்திகள்

கந்துவட்டி கொடுத்து வந்த பெண், கழுத்தை அறுத்துக் கொலை + "||" + A woman who gave usury,Cut the neck Kill

கந்துவட்டி கொடுத்து வந்த பெண், கழுத்தை அறுத்துக் கொலை

கந்துவட்டி கொடுத்து வந்த பெண், கழுத்தை அறுத்துக் கொலை
கந்துவட்டி கொடுத்து வந்த பெண், கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டார்.
மங்களூரு,

கந்துவட்டி கொடுத்து வந்த பெண், கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக போலீசார் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

உடுப்பி மாவட்டம் கார்கலா தாலுகா குக்கூந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் புளோரின். இவர் அந்தப்பகுதியில் கந்துவட்டி தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருடைய வீடு திறக்கப்படாமல் கிடந்தது. இதனால் சந்தேகமடைந்த அந்தப்பகுதி மக்கள், வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது, வீட்டுக்குள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் புளோரின் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதி மக்கள், இதுகுறித்து கார்கலா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.


பின்னர் புளோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கார்கலா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவரை யாரோ மர்மநபர்கள் கழுத்தை அறுத்துக் கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக கார்கலா போலீசார், புளோரினின் செல்போன் மூலம் விசாரணையை தொடங்கி உள்ளனர். அதாவது, அவருடன் யார் அடிக்கடி செல்போனில் பேசி உள்ளனர்?, அவருடன் கடைசியாக பேசியது யார்? என்பது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறார்கள். இதுகுறித்து கார்கலா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.ஆசிரியரின் தேர்வுகள்...