மாவட்ட செய்திகள்

குடவாசல் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 3 லாரிகள் பறிமுதல் + "||" + Three lorries were seized without permission from Kudavasal

குடவாசல் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 3 லாரிகள் பறிமுதல்

குடவாசல் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 3 லாரிகள் பறிமுதல்
குடவாசல் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 3 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
குடவாசல்,

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள மணக்கால் அய்யம்பேட்டை பகுதியில் குடவாசல் துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) நந்தகோபால் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 2 லாரிகள் மணல் ஏற்றி வந்து கொண்டிருந்தன.


அந்த லாரிகளை போலீசார் வழிமறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து லாரி டிரைவர்கள் நாகை மாவட்டம் சிக்கலை சேர்ந்த கமல்ராஜ், திருவாரூரை சேர்ந்த ராகுல் ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல அரசவனங்காடு பகுதியில் குடவாசல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார், லாரி டிரைவர் நாகை மாவட்டம் கீழ்வேளூரை சேர்ந்த கோகுல் மீது வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.