நெல்லையில் பிரபல செல்போன் நிறுவனங்களின் செல்போன் உதிரிபாகங்களை போலியாக தயாரித்து விற்பனை வடமாநிலத்தை சேர்ந்த 3 பேர் கைது


நெல்லையில் பிரபல செல்போன் நிறுவனங்களின் செல்போன் உதிரிபாகங்களை போலியாக தயாரித்து விற்பனை  வடமாநிலத்தை சேர்ந்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 13 July 2018 3:30 AM IST (Updated: 12 July 2018 7:03 PM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் பிரபல செல்போன் நிறுவனங்களின் செல்போன் உதிரிபாகங்களை போலியாக தயாரித்து விற்பனை செய்ததாக வடமாநிலத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை, 

நெல்லையில் பிரபல செல்போன் நிறுவனங்களின் செல்போன் உதிரிபாகங்களை போலியாக தயாரித்து விற்பனை செய்ததாக வடமாநிலத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

போலீசில் புகார்

பிரபல செல்போன் நிறுவனங்களின் தயாரிப்பில் உருவான உதிரி பாகங்களை போன்றே போலியான உதிரி பாகங்கள் நெல்லையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதுவும் செல்போன் கடைகளில் இந்த போலி உதிரி பாகங்கள் விற்பனை அதிக அளவில் நடப்பதாகவும் கூறப்பட்டது.

இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி அந்த செல்போன் நிறுவன தலைமை அதிகாரி சகாயம், நெல்லையில் உள்ள அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

அதிரடி சோதனை

புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசுலோச்சனா தலைமையில் போலீசார் சோதனை நடத்த முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் இரவில் நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள செல்போன் கடைகளில் போலீசார் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது 5 கடைகளில் பிரபல செல்போன் நிறுவனங்களின் தயாரிப்பில் உருவானது போன்றே போலி உதிரி பாகங்கள் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து ரூ.7 லட்சம் மதிப்பிலான செல்போன் உதிரிபாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த செல்போன்களின் போலி உதிரிபாகங்கள் விற்பனை செய்ததாக வடமாநிலத்தை சேர்ந்த கிஷோர்சிங் (வயது 30), வினோராம் (28), அம்பலால் (38) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

நெல்லையில் தொழிற்சாலையா?

கைதானவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, இந்த செல்போன்களின் போலி உதிரி பாகங்கள் வெளி மாநிலங்களில் தயாரிக்கப்பட்டு இங்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த செல்போன் நிறுவன தலைமை அதிகாரி நெல்லையில் அதிக அளவில் போலி உதிரி பாகங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் அளித்துள்ளதால் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பிரபல செல்போன் நிறுவனத்தின் போலி உதிரி பாகங்கள் நெல்லையிலேயே தயாரிக்கப்பட்டு இங்கிருந்து வெளியூர்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறதா?


Next Story