கோடநாடு எஸ்டேட் கொலை வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாத சதீசன் கைது


கோடநாடு எஸ்டேட் கொலை வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாத சதீசன் கைது
x
தினத்தந்தி 16 July 2018 4:15 AM IST (Updated: 17 July 2018 12:23 AM IST)
t-max-icont-min-icon

கோடநாடு எஸ்டேட் கொலை வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாத சதீசனை போலீசார் கைது செய்தனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்பு உடைய கேரள மாநிலத்தை சேர்ந்த சயன், மனோஜ் சாமி, தீபு, ஜம்ஷீர் அலி, சதீசன், பிஜின், உதயகுமார், சந்தோஷ் சாமி, வாளையார் மனோஜ், ஜித்தின்ராய் ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அந்த 10 பேரும் ஜாமீனில் வெளியே உள்ளனர். இந்த வழக்கு நீலகிரி மாவட்ட கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் சயன், மனோஜ் சாமி, ஜம்ஷீர்அலி, பிஜின், உதயகுமார், சந்தோஷ் சாமி, வாளையார் மனோஜ் ஆகிய 7 பேர் கோர்ட்டில் ஆஜரானார்கள். சதீசன் மட்டும் ஆஜராகவில்லை. இதனை தொடர்ந்து அவருக்கு பிடிவாரண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கோத்தகிரி போலீசார் சதீசனை வலை வீசி தேடினர். அவர் கேரள மாநிலம் திருச்சூரில் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று சதீசனை கைது செய்தனர்.

பின்னர் அவரை நேற்று ஊட்டிக்கு கொண்டுவந்து நீலகிரி மாவட்ட கோர்ட்டில் நீதிபதி முரளிதரன் முன்பு ஆஜர்படுத்தினர். இதனை தொடர்ந்து சதீசன் போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.


Next Story