சத்துணவு முட்டையில் கொள்ளையடித்தவர்கள் அ.தி.மு.க.வினர் - தி.மு.க. அமைப்பு செயலாளர் பேச்சு


சத்துணவு முட்டையில் கொள்ளையடித்தவர்கள் அ.தி.மு.க.வினர் - தி.மு.க. அமைப்பு செயலாளர் பேச்சு
x
தினத்தந்தி 17 July 2018 5:30 AM IST (Updated: 17 July 2018 1:27 AM IST)
t-max-icont-min-icon

ஏழைகுழந்தைகளுக்கு கொடுக்கும் சத்துணவு முட்டையில் கொள்ளையடித்தவர்கள் அ.தி.மு.க.வினர் என்று தி.மு.க. அமைப்பு செயலாளர் பேசினார்.

உசிலம்பட்டி,

பேரையூர் தாலுகா, சேடபட்டி ஒன்றியம் சார்பில் சாப்டூரில் கருணாநிதியின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். சேடபட்டி ஒன்றிய செயலாளர் பெருங்காமநல்லூர் ஜெயச்சந்திரன் வரவேற்றார். விழாவில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., தேர்தல்பணிக்குழு செயலாளர் சேடபட்டி முத்தையா, வடக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி, தலைமைகழக பேச்சாளர் சூர்யா வெற்றிகொண்டான் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

அதில் தி.மு.க. அமைப்பு செயலாளர் பேசும் போது கூறியதாவது:– எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தன்னை தூக்கிவிட்டவர்களை ஜெயிலுக்கு அனுப்பிட்டு, அவங்களை குறைசொல்லி வாழ்ந்து வருகின்றனர். ஏழைக்குழந்தைகளுக்கு கொடுக்கும் சத்துணவு முட்டையில் கொள்ளை அடித்தவர்கள் இந்த ஆட்சியாளர்கள். ரூ.2 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான சேதுசமுத்திர திட்டம் நிறைவேற்றியிருந்தால், மதுரை முதல் ராமேசுவரம் வரை சிறந்து விளங்கியிருக்கும். எடப்பாடி பழனிச்சாமி தனது சம்மந்தியை வாழ வைக்க அரசு ஒப்பந்தகாரர் வேலையெல்லாம் கொடுக்கிறார்.

சேலம் 8 வழிச்சாலை அமைக்க ரூ.10ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு கஜானாவை 2 பேரும் காலி செய்துவிட்டனர். உலகத்தில் நன்றி கெட்டவர்கள் கூட்டம் என்று இருந்தால், அது இப்போதுள்ள அ.தி.மு.க. தான். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு பாசபிரபு, உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர் சுதந்திரம், செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் சுதாகரன், எழுமலை பேரூர் செயலாளர் ஜெயராமன், பேரையூர் செயலாளர் பாஸ்கரன், எழுமலை கட்டாரிபாண்டி, முன்னாள் யூனியன் துணை தலைவர் சின்னப்பாண்டி, பொதுக்குழு உறுப்பினர் சங்கரபாண்டி, செல்லம்பட்டி முன்னாள் கவுன்சிலர் முத்துராமன், டி.கல்லுப்பட்டி முத்துகணேஷ் உள்பட நகர, ஒன்றிய, வார்டுகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சாப்டூர் கிளை செயலாளர் குருநாதன் நன்றி கூறினார்.


Next Story