நிர்மலாதேவி, முருகன் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி
பேராசிரியை நிர்மலாதேவி, பேராசிரியர் முருகன் ஆகியோர் ஜாமீன் மனு விருதுநகர் மாவட்ட கோர்ட் மீண்டும் தள்ளுபடி செய்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
அருப்புக்கோட்டை கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு செல்போனில் பேசி அழைத்த குற்றச்சாட்டின் பேரில் அந்த கல்லூரியின் பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்ததாக பேராசிரியர் முருகனும் கைதானார். இருவரும் மதுரை சிறையில் உள்ளனர். இருவர் சார்பிலும் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வந்தன. இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு முதற்கட்ட குற்றப்பத்திரிகையை கடந்த வாரம் தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் பேராசிரியை நிர்மலாதேவி, பேராசிரியர் முருகன் ஆகியோர் சார்பில் ஜாமீன் கேட்டு விருதுநகர் மாவட்ட கோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இதனை நீதிபதி முத்துசாரதா நேற்று விசாரித்து ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தார்.
Related Tags :
Next Story