நாடாளுமன்றத்தில் நடந்த விவாதம் மத்திய அரசு மீது மக்களின் வெறுப்பை எடுத்து சொல்லும் விதமாக இருந்தது
நாடாளுமன்றத்தில் நடந்த விவாதம் மத்திய அரசு மீது மக்களின் வெறுப்பை எடுத்து சொல்லும் விதமாக இருந்தது என்று திருச்சியில் வைகோ கூறினார்.
திருச்சி,
திருச்சியில் நடந்த மாநில மாநாட்டுக்கு பிறகு, 23 ஆண்டுகள் கழித்து ஈரோட்டில் முப்பெரும் விழாவாக மாநில மாநாடு நடத்தப்படுகிறது. இதில் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கைஇல்லா தீர்மானத்தின்போது, நடந்த விவாதத்தில் மத்திய அரசின் நிர்வாக தோல்வி, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாதது, பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லாதது, விமானப்படை விமானத்துக்கான ஒப்பந்தத்தில் நடந்த திரைமறைவு முறைகேடு போன்ற குற்றச்சாட்டுக்களை அடுக்கடுக்காக ராகுல்காந்தி வைத்துள்ளார். எண்ணிக்கை அடிப்படையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெறவில்லை என்றாலும், நான்கு ஆண்டுகால ஆட்சியில் மத்திய அரசு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மத்திய அரசு மீது மக்களுடைய வெறுப்பை எடுத்து சொல்லும் விதமாக விவாதம் அமைந்து இருந்தது.
அந்த தீர்மானத்தில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக அ.தி.மு.க. வாக்களித்து இருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. இது எதிர்பார்த்த ஒன்று தான். நாட்டில் பல்வேறு சோதனைகள் நடந்த போதிலும், அதன் முடிவு என்ன?. போடப்பட்ட வழக்குகளின் நிலை என்ன? என்பதெல்லாம் மூடு மந்திரமாகவே உள்ளது. மக்கள் நம்பிக்கை கொள்ளும் வகையில் மேல் நடவடிக்கைகள் அறிவிக்கப்பட வேண்டும்.
நீட்தேர்வு கேள்வித்தாள் குளறுபடியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து இருப்பது வருத்தம் அளிக்கிறது. நீட் தேர்வு விவகாரத்தில் தொடர்ந்து நம்முடைய தலையில் கல்லை போடும் விதமாகவே உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து திருச்சி வக்கீல்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் வீரபாண்டியன் எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா மத்திய பஸ்நிலையம் அருகே ஒரு ஓட்டலில் நேற்று மாலை நடந்தது. இதில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கி, நூல்களை வெளியிட்டு பேசினார். விழாவில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ., தேசிய நல்லாசிரியர் விருதுபெற்ற லலிதா வீரபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தீக்குளித்து இறந்த ம.தி.மு.க. தொண்டர் சிவகாசி ரவி குடும்பத்துக்கு விழாவில் ரூ.2½ லட்சம் நிதி வழங்கப்பட்டது.

Related Tags :
Next Story