திருமருகல் அருகே அ.தி.மு.க. பிரமுகர் மர்மசாவு போலீசார் விசாரணை


திருமருகல் அருகே அ.தி.மு.க. பிரமுகர் மர்மசாவு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 22 July 2018 3:45 AM IST (Updated: 22 July 2018 2:55 AM IST)
t-max-icont-min-icon

திருமருகல் அருகே அ.தி.மு.க. பிரமுகர் மர்மமான முறையில் இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமருகல்,

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் மருங்கூர் கீழத்தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது60). இவர் அ.தி.மு.க. முன்னாள் கிளை செயலாளராக இருந்து வந்தார். இவரது மனைவி 20 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். 2 மகன்களும் வெளியூரில் பணிபுரிந்து வருகின்றனர். கண்ணன் மட்டும் தனியாக தனது வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை கண்ணன் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கண்ணன் வீட்டை திறந்து பார்த்துள்ளனர்.

அப்போது கண்ணன் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார். இது குறித்து அக்கம்பக்கத்தினர் கண்ணனின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து திட்டச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திட்டச்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கண்ணனின் உடலை கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கண்ணன் எப்படி இறந்தார்? என தெரியவில்லை. அவர் உடல் நலக்குறைவு காரணமாக இறந்தாரா? அல்லது அவரது மரணத்தில் வேறு ஏதும் மர்மம் உள்ளதா? என திட்டச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story