லாரிகள் வேலைநிறுத்தம் 2-வது நாளாக நீடிப்பு: நாமக்கல் மண்டலத்தில் 5 கோடி முட்டைகள் தேக்கம்
லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது. இதனால் நாமக்கல் மண்டலத்தில் சுமார் 5 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்து இருப்பதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.
நாமக்கல்,
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது. இதனால் தரைவழி சரக்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக நாடு முழுவதும் பல ஆயிரம் கோடி மதிப்பிலான சரக்குகள் ஆங்காங்கே தேக்கம் அடைந்து உள்ளன. தமிழகத்தை பொறுத்த வரையில் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருப்பதால், பெரும்பாலான லாரிகள் நேற்று 2-வது நாளாக இயக்கப்படவில்லை.
பால், மருந்து, தண்ணீர் உள்ளிட்டவைகளை ஏற்றி செல்லும் லாரிகளுக்கு போராட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருந்ததால் அந்த லாரிகளும், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்காத சங்கங்களை சேர்ந்த சில லாரிகளும் மட்டுமே இயக்கப்பட்டன. பெரும்பாலான லாரிகள் இயக்கப்படாததால், சாலைகள் வெறிச்சோடி கிடந்தன.
இந்த போராட்டம் காரணமாக லாரி உரிமையாளர்களுக்கும், மத்திய, மாநில அரசுகளுக்கும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
இது குறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி, செயலாளர் தன்ராஜ் ஆகியோர் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் மொத்தம் உள்ள 4½ லட்சம் சரக்கு வாகனங்களில் சுமார் 4 லட்சம் சரக்கு வாகனங்கள் ஓடவில்லை. இது எங்களது போராட்டத்துக்கு கிடைத்த பெரிய வெற்றியாகும். இருப்பினும் நாள்ஒன்றுக்கு ரூ.250 கோடி வீதம் தமிழக லாரி உரிமையாளர்களுக்கு கடந்த 2 நாட்களில் சுமார் ரூ.500 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது.
போராட்டம் தொடங்குவதற்கு முந்தைய நாள் மத்திய மந்திரி நிதின் கட்கரி, அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு அரசு தரப்பில் பேச்சுவார்த்தைக்கு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. எனவே எங்களது போராட்டத்தை தீவிரப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சுங்க கட்டண உயர்வு போன்றவற்றால் பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே தங்களது எதிர்ப்பை அரசுக்கு தெரிவிக்கும் வகையில் நாளை (இன்று) ஒருநாள் மட்டும் காலை முதல் மாலை வரை அனைவரும் தங்களது இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களை இயக்காமல் போராட்டத்துக்கு ஆதரவு தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கிடையே லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் முதல் 2 நாட்கள் ஆதரவு தெரிவித்து இருந்தது. இதனால் நாமக்கல் மண்டலத்தில் உற்பத்தி செய்யப்படும் சுமார் 3 கோடி முட்டைகளில் 50 லட்சம் முட்டைகள் சரக்கு ஆட்டோக்களில் கொண்டு செல்லப்பட்டாலும், சுமார் 2½ கோடி முட்டைகள் நேற்று முன்தினம் தேக்கம் அடைந்தது. இதேபோல் நேற்று 2-வது நாளாக மேலும் 2½ கோடி முட்டைகள் என மொத்தம் சுமார் 5 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்து இருப்பதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.
இந்த முட்டைகள் கோழிப்பண்ணைகள் மற்றும் ஆங்காங்கே உள்ள குடோன்களில் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. அவற்றை எப்படி விற்பனைக்கு அனுப்புவது என்பது தெரியாமல் பண்ணையாளர்கள் திணறி வருகின்றனர். லாரிகள் வேலைநிறுத்தம் நீடிக்கும் பட்சத்தில் முட்டை லாரிகளுக்கு விலக்கு கேட்டு, தேங்கி உள்ள முட்டைகள் மற்றும் தினசரி உற்பத்தியாகும் முட்டைகளை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளனத்தின் துணை தலைவர் வாங்கிலி கூறினார்.
கோழித்தீவன மூலப்பொருட்களை பொறுத்தவரையில், வேலைநிறுத்தம் அறிவிப்பு வெளியான உடன் ஓரளவு இருப்பு வைத்து கொண்டதால், அவற்றிற்கு உடனடியாக தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் பரமத்தி வேலூர் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ராமசாமி தலைமையில் சங்கத்தினர், கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களை இணைக்கும் பரமத்தி வேலூர் தேசிய நெடுஞ்சாலை காவிரி பாலத்தின் அருகில் நின்று தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரிகளை தடுத்து நிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்குமாறு டிரைவர்களிடையே வேண்டுகோள் விடுத்தனர்.
அப்போது அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலையின் பிரதான பகுதிகளில் பரமத்தி மற்றும் வேலூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

Related Tags :
Next Story