ஆரணியில் ஓய்வு பெற்ற ரெயில்வே அதிகாரி லாரி மோதி பலி
ஆரணியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த ஓய்வு பெற்ற ரெயில்வே அதிகாரி லாரி மோதி பலியானார்.
ஆரணி,
சென்னை, ஆவடி பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 60). இவர் ரெயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக பணியாற்றி ஓய்வு பெற்றிருந்தார். இவரது மகன் தினேஷ்குமார் ஆரணியை அடுத்த இரும்பேட்டில் வசித்து வருகிறார்.
அவரை பார்ப்பதற்காக ராஜா கடந்த சிலதினங்களுக்கு முன்பு இரும்பேட்டிற்கு வந்திருந்தார். நேற்று காலை ஆரணி - ஆற்காடு நெடுஞ்சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். இரும்பேடு கூட்ரோடு அருகே அவர் சென்றபோது ஆரணியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற லாரி ராஜா மீது மோதியது. இந்த விபத்தில் ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து லாரி டிரைவர் செஞ்சி தாலுகா திருவம்பட்டு கிராமத்தை சேர்ந்த இளையராஜா (வயது 30) என்பவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ராஜாவுக்கு சாந்தா என்ற மனைவியும், தினேஷ்குமார் என்ற மகனும், ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளனர்.
ஆரணி, இரும்பேடு காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் குட்டி. இவரது மனைவி ருக்குமணி (40) அதே பகுதியில் உள்ள செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் செங்கல் ஏற்றிய டிராக்டரில் அமர்ந்து சென்று கொண்டிருந்தார். சக்திநகர் அருகே டிராக்டர் ஒரு பள்ளத்தில் ஏறி இறங்கும்போது எதிர்பாராதவிதமாக டிராக்டருடன் இணைக்கப்பட்டிருந்த டிரெய்லர் கவிழ்ந்தது.
இதில் ருக்குமணி மீது செங்கற்கள் விழுந்ததால் அவர் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவர் ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story