மேட்டூர் ரவுடி கொலை வழக்கு: நாமக்கல் கோர்ட்டில் 5 பேர் சரண்
மேட்டூரில் ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் நாமக்கல் கோர்ட்டில் 5 பேர் சரண் அடைந்தனர்.
நாமக்கல்,
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கருமலைக் கூடல் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 30). ரவுடியான இவர் மீது கருமலைக்கூடல் போலீசில் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த 23-ந் தேதி கோம்புரான்காடு பகுதியில் உள்ள மதுக்கடைக்கு கண்ணன் மது குடிக்க சென்றார். அப்போது அங்கு மதுகுடிக்க வந்த சிலருக்கும், கண்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றியதில் கண்ணனை ஒரு கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது. இது தொடர்பாக கருமலைக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் கண்ணன் கொலை வழக்கில் போலீசார் தேடி வந்த மேட்டூர் பொன் நகரை சேர்ந்த மகேந்திரன் (28), தெர்மல் பகுதியை சேர்ந்த அழகு என்கிற தம்பிதுரை (26), பிரசாத் (29), செந்தில்குமார் (25), மணி என்கிற மோகன்ராஜ் (27) ஆகிய 5 பேர் நேற்று நாமக்கல் 2-வது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
அவர்கள் 5 பேரையும் மாஜிஸ்திரேட்டு தமயந்தி 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் 5 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேலம் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

Related Tags :
Next Story