காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பெங்களூருவில் அடுத்த வாரம் நடைபெற உள்ளதாகவும், இதில் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து முக்கிய முடிவு எடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
பெங்களூரு,
சித்தராமையா தலைமையில் ஏற்கனவே 2 முறை நடந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விவசாய கடன் தள்ளுபடி, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் உள்ள முக்கிய திட்டங்களை செயல்படுத்துவது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்த நிலையில், 3-வது முறையாக அடுத்த வாரம் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை கூட்ட இரு கட்சிகளின் தலைவர்களும் முடிவு செய்துள்ளனர். அநேகமாக இந்த கூட்டம் வருகிற 30-ந் தேதி அல்லது 31-ந் தேதி பெங்களூருவில் சித்தராமையா தலைமையில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை கூட்டுவதற்கு முக்கிய காரணமாக மந்திரிசபையில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்புவது பற்றியும், வாரிய தலைவர்களை நியமிப்பது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தி முக்கிய முடிவு எடுக்க இரு கட்சி தலைவர்களும் தீர்மானித்திருப்பதாக தெரிகிறது. அத்துடன் மாவட்ட பொறுப்பு மந்திரிகள் நியமிப்பது தொடர்பாகவும் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் மாவட்ட பொறுப்பு மந்திரிகளை நியமிப்பதில் காலதாமதம் ஆவதாகவும் சொல்லப்படுகிறது.
இதனால் சித்தராமையா தலைமையில் நடைபெற உள்ள ஒருங்கிணைப்பு கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மந்திரிகளுக்கு எந்த மாவட்டங்களை ஒதுக்கலாம், ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த மந்திரிகளுக்கு ஒதுக்கப்பட உள்ள மாவட்டங்கள் குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தி முக்கிய முடிவு எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணி ஆட்சியை எந்த விதமான பிரச்சினையும் இல்லாமல் முன்னெடுத்து செல்ல முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் முதல்-மந்திரி குமாரசாமி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால், ஜனதாதளம்(எஸ்) மூத்த தலைவர் டேனீஸ் அலி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
சித்தராமையா தலைமையில் ஏற்கனவே 2 முறை நடந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விவசாய கடன் தள்ளுபடி, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் உள்ள முக்கிய திட்டங்களை செயல்படுத்துவது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்த நிலையில், 3-வது முறையாக அடுத்த வாரம் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை கூட்ட இரு கட்சிகளின் தலைவர்களும் முடிவு செய்துள்ளனர். அநேகமாக இந்த கூட்டம் வருகிற 30-ந் தேதி அல்லது 31-ந் தேதி பெங்களூருவில் சித்தராமையா தலைமையில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை கூட்டுவதற்கு முக்கிய காரணமாக மந்திரிசபையில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்புவது பற்றியும், வாரிய தலைவர்களை நியமிப்பது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தி முக்கிய முடிவு எடுக்க இரு கட்சி தலைவர்களும் தீர்மானித்திருப்பதாக தெரிகிறது. அத்துடன் மாவட்ட பொறுப்பு மந்திரிகள் நியமிப்பது தொடர்பாகவும் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் மாவட்ட பொறுப்பு மந்திரிகளை நியமிப்பதில் காலதாமதம் ஆவதாகவும் சொல்லப்படுகிறது.
இதனால் சித்தராமையா தலைமையில் நடைபெற உள்ள ஒருங்கிணைப்பு கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மந்திரிகளுக்கு எந்த மாவட்டங்களை ஒதுக்கலாம், ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த மந்திரிகளுக்கு ஒதுக்கப்பட உள்ள மாவட்டங்கள் குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தி முக்கிய முடிவு எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story