அரசியல் ஆதாயத்திற்காக பா.ஜனதாவினர் பாதயாத்திரை துணை முதல்-மந்திரி குற்றச்சாட்டு
விவசாய கடன் தள்ளுபடி குறித்து பிரதமரை சந்தித்து பேசலாம் என்றும், அரசியல் ஆதாயத்திற்காக பா.ஜனதாவினர் பாதயாத்திரை மேற்கொள்வதாகவும் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
பெங்களூரு,
பெங்களூருவில் நேற்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விவசாய கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி ராமநகரில் இருந்து பெங்களூருவுக்கு பா.ஜனதாவினர் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர். கர்நாடகத்தில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ரூ.50 ஆயிரம் வரையிலான விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சியில் ரூ.48 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது.
அப்படி இருக்கும் பட்சத்தில் விவசாய கடன் முழுவதையும் தள்ளுபடி செய்யும்படி கூறி அரசியல் ஆதாயத்திற்காக பா.ஜனதாவினர் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர். மக்களை திசை திருப்ப இதுபோன்று பாதயாத்திரை, போராட்டங்களை பா.ஜனதாவினர் நடத்துகிறார்கள். என்றாலும், இப்போதாவது விவசாயிகள் மீது பா.ஜனதாவினருக்கு அக்கறை வந்திருப்பது வரவேற்கத்தக்கது.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக இருந்த மன்மோகன்சிங் விவசாய கடன் ரூ.74 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்திருந்தார். தற்போது விவசாயிகள் மீது அக்கறை இருப்பதாக காட்டி கொள்ளும் பா.ஜனதாவினர், விவசாய கடனை தள்ளுபடி செய்ய முன்வரவில்லை. விவசாயிகள் மீது பா.ஜனதாவினருக்கு அக்கறை இருந்தால், பிரதமரை சந்தித்து விவசாய கடன் தள்ளுபடி குறித்து பேச வேண்டும்.
வடகர்நாடகத்தில் வளர்ச்சிப் பணிகளுக்கு பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால் வடகர்நாடக மாவட்டங்களில் வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை என்றும், அந்த மாவட்டங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் கூறுவது உண்மைக்கு புறம்பானது. அகண்ட கர்நாடகத்தை உருவாக்குவதே ஒவ்வொருவரின் குறிக்கோள் ஆகும். வடகர்நாடகத்தில் வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை எனக்கூறி தனிமாநில கோரிக்கை விடுப்பது, முழு அடைப்புக்கு அழைப்பு விடுப்பது சரியானது அல்ல. இதனை எக்காரணத்தை கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

Related Tags :
Next Story