மும்பையில் கட்சி நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை


மும்பையில் கட்சி நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை
x
தினத்தந்தி 29 July 2018 4:59 AM IST (Updated: 29 July 2018 4:59 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் கட்சி நிர்வாகிகளுடன் பா.ஜனதா தலைவர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.

மும்பை,

மராத்தா இட ஒதுக்கீடு போராட்ட பிரச்சினையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை மாற்ற பா.ஜனதா மேலிடம் முடிவு செய்திருப்பதாக சிவசேனா மூத்த தலைவரான சஞ்சய் ராவுத் பரபரப்பு தகவலை வெளியிட்டார். இந்தநிலையில் மராத்தா இடஒதுக்கீடு பிரச்சினையில் நேற்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அனைத்துக்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா நேற்று ஒருநாள் பயணமாக மும்பைக்கு வருகை தந்தார்.

தென்மும்பையில் உள்ள திரையரங்கு ஒன்றில் அமித்ஷாவிற்கு “சலோ ஜீதே ஹய்ன்” என்னும் படம் சிறப்பு காட்சியாக திரையிட்டு காட்டப்பட்டது.

32 நிமிடங்கள் ஓடும் இந்த படம் பிரதமர் நரேந்திர மோடியின் தொடக்க கால வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டதாகும். இந்த படத்தை மகேஷ் அத்வாலே என்பவர் இயக்கியுள்ளார்.

மேலும் கட்சி நிர்வாகிகளுடனும் அமித்ஷா மராத்தா இடஒதுக்கீடு பிரச்சினையில் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அமித்ஷா பயணம் ஏற்கனவே திட்டமிடப்பட்டது என்றும், மராத்தா விவகாரம் தொடர்பாக அவர் மும்பை பயணிக்கவில்லை என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. 

Next Story