பெண்ணைதாக்கியதாக புகார்: இருக்கன்குடி சப்–இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்
பெண்ணை தாக்கியதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் இருக்கன்குடி சப்–இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
விருதுநகர்,
சாத்தூர் அருகேயுள்ள பி.லட்சுமியாபுரத்தை சேர்ந்த முத்துபெருமாள் என்பவரது மனைவி முத்துரதி (வயது38). கணவரை பிரிந்த இவர் 2 குழந்தைகளுடன் சகோதரி முத்துபாப்பா வீட்டில் வசித்து வருகிறார். முத்துபாப்பாவுக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்தவருக்கும் இடத்தகராறு இருந்துள்ளது. இதில் விசாரணைக்காக இருக்கன்குடி போலீஸ் நிலையத்துக்கு முத்துரதி சென்றுள்ளார். அவரை, விசாரணை நடத்திய சப்–இன்ஸ்பெக்டர் விஜயன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர் சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில் பெண்ணை தாக்கியதாக எழுந்த புகாரின் பேரில் சப்–இன்ஸ்பெக்டர் விஜயனை ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story