இறுதி ஊர்வலத்தில் மோதல்; ஜாமீன் கைதிக்கு அரிவாள் வெட்டு


இறுதி ஊர்வலத்தில் மோதல்; ஜாமீன் கைதிக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 31 July 2018 9:45 PM GMT (Updated: 2018-08-01T01:59:11+05:30)

சாத்தூர் அருகே இறுதி ஊர்வலத்தில் மோதல் ஏற்பட்டதில் ஜாமீன் கைதிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

சாத்தூர்,

சாத்தூர் அருகேயுள்ள சுந்தரலிங்காபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது28). கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்துள்ள நிலையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பவித்ராஜ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை பவித்ராஜுன் தந்தை முத்து குருசாமி(45) கண்டித்து வந்துள்ளார். இந்த நிலையில் அங்கு ஒரு பெண் இறந்து போனார். அங்கு கிருஷ்ணசாமி வந்தபோது அவருக்கும் முத்து குருசாமிக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் கிருஷ்ணசாமிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அவர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

 இதுதொடர்பாக சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துகுருசாமி, ராமமூர்த்தி (22) ஆகியோரை கைது செய்தனர். சீனிவாசன், ராஜ்கிரன், ராக்கையா, ராஜேஷ்குமார் ஆகிய 4 பேரை தேடி வருகின்றனர்.


Next Story