திருவானைக்காவலில் பாகனுடன் கொஞ்சி விளையாடும் கோவில் யானை
திருவானைக்காவலில் பாகனுடன் கோவில் யானை கொஞ்சி விளையாடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஸ்ரீரங்கம்,
சமயபுரம் மாரியம்மன் கோவில் யானை மசினி கடந்த மாதம் திடீரென்று கோபமடைந்து பாகன் கஜேந்திரனை மிதித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் யானையை பார்க்கும்போதெல்லாம் திருச்சி மக்களுக்கு ஒருவித அச்சம் ஏற்பட்டது.
இந்நிலையில் திருவானைக் காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் யானை அகிலா, அதன் பாகன் ஜெம்புநாதனுடன் கொஞ்சி விளையாடும் காட்சிகள் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோ காட்சியில் யானை அகிலா, பாகனை தலையில் இருந்து உடல் முழுவதும் வருடி விடுவதும், பாகனை முத்தமிடுவதும், பாகனுக்கு மசாஜ் செய்வதும், தன் காலை தூக்கி வைத்து பாகனை பிடித்து விட செய்ய வைப்பதும், அவருக்கு முன்பு நடனமாடுவதும் என்று குறும்பு செய்து வருகிறது.
இதனை செல்போனில் பார்க்கும் அனைவரும் மிகவும் ரசித்து வருகிறார்கள்.
ஒடிசாவில் இருந்து 4 வயதில் கொண்டு வரப்பட்ட அகிலா யானைக்கு தற்போது 9 வயதாகிறது. அகிலா, ஏற்கனவே யானைகள் முகாமில் ஸ்ரீரங்கம் ஆண்டாள் யானையுடன் இணைந்து செய்த சேட்டைகளும், திருவானைக்காவல் கோவில் பிரகாரத்தில் திண்ணையில் மனிதனை போல அமர்ந்து இருந்த காட்சியும் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வந்து ரசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Tags :
Next Story