நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேட்டி
நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறினார்.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அரசையும், தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியை பற்றி அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைவரும், நடிகருமான சீமான் மீது வழக்கு ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இதையடுத்து நேற்று கோர்ட்டில் சீமான் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி மதிவாணன் வழக்கை வருகிற 23–ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.
தொடர்ந்து சீமான் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
எதிர் கட்சிகளின் போராட்டங்களை பார்த்து ஆளும் அரசு அச்சப்படுகிறது. மக்களின் பிரச்சினைகளுக்காக போராடுபவர்களை மக்களிடம் இருந்து துண்டிக்கும் வகையில், பொய் வழக்குகளை போட்டு நீதிமன்றம், நீதிமன்றங்களாக அலையவிடுகிறார்கள். தமிழக அரசானது மக்களின் பிரச்சினைகளுக்காக நடத்தப்படும் போராட்டங்களுக்கு அரசு அனுமதி தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. நாங்கள் யாருடனும் கூட்டணி இல்லை. எங்கள் கூட்டணியில் இணைபவர்களை, நாங்கள் இணைத்துக்கொள்வோம். நாடாளுமன்ற தேர்தலில் தனித்தே போட்டியிடுவோம். ஜனநாயக நாட்டில் எதிர்மறையாக இருப்பது சர்வாதிகார ஆட்சியாக உள்ளது. இது எதிர்கட்சிகளின் குரல் வளையை நெறிக்கும் செயல் ஆகும்.
உள்ளாட்சி மன்ற தேர்தல் நடத்தினால் அ.தி.மு.க. வெற்றி பெறாது என்ற எண்ணத்தில் தான் தமிழக அரசு தேர்தலை நடத்தவில்லை. அனைத்து நாசகார திட்டங்களும் தமிழகத்தை நோக்கி படையெடுக்க காரணம் அதனை எதிர்க்க துணிவில்லாத அரசு இருப்பதால் தான். இதன் மூலம் தமிழகத்தை குப்பை தொட்டியாக மாற்ற தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. சிலை கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் விசாரணையில், முக்கிய அரசியல் நபர்களின் தலையீடு மற்றும் தொடர்புடையது என கண்டறியப்பட்டதால் அந்த விசாரணையை முடக்கி சி.பி.ஐ. விசாரணையை கோருவது தமிழக அரசிற்கு அவமானம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story