புதுக்கோட்டை கலெக்டரின் நேர்முக உதவியாளர் கொலை: கள்ளக்காதலி சவுந்தர்யா அதிரடி கைது
புதுக்கோட்டை கலெக்டரின் நேர்முக உதவியாளர் கொலை வழக்கில் கள்ளக்காதலி சவுந்தர்யா நேற்று கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
புதுக்கோட்டை,
திருச்சி ராஜா காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் பூபதிகண்ணன்(வயது 45). இவர் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளராக(வேளாண்மை) பணியாற்றி வந்தார். இவரது மனைவி அனுராதா, திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார். பூபதிகண்ணன் புதுக்கோட்டைக்கு வேலைக்காக தினமும் சொந்த காரில் சென்று வந்து கொண்டிருந்தார்.
இந்தநிலையில் கடந்த 28-ந் தேதி காலை பூபதிகண்ணன் திருச்சி-புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் மாத்தூர் அருகே காட்டுப்பகுதியில் அவரது காருக்கு அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், கொலை நடந்ததற்கு முந்தைய நாள், பூபதிகண்ணன் அலுவலகத்தில் டைப்பிஸ்டாக வேலைபார்க்கும் திருச்சி நவல்பட்டு அண்ணாநகரை சேர்ந்த சவுந்தர்யா என்பவர், பூபதிகண்ணனுடன் காரில் சென்றது நெடுஞ்சாலையில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளில் பதிவாகி இருந்தது.
அதைத்தொடர்ந்து சவுந்தர்யாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், பூபதிகண்ணனுடன் காரில் சென்றதையும், அவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததையும், அடிக்கடி இருவரும் உல்லாசம் அனுபவித்ததையும் ஒப்புக்கொண்டார்.
மேலும் கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த சுரேஷ் என்பவருடன் தனக்கு திருமணம் நடந்தது என்றும், அவர் கரூர் வேளாண்மைத்துறை ஊழியராக வேலைபார்த்த போது தற்கொலை செய்து கொண்டதால், கருணை அடிப்படையில் தனக்கு ‘டைப்பிஸ்ட்’ வேலை கிடைத்ததாகவும், அங்கு தனக்கு அதிகாரியான பூபதிகண்ணனுடன் தொடர்பு ஏற்பட்டதையும் தெரிவித்தார்.
மேலும் கொலை நடந்த அன்று அவரும், பூபதிகண்ணனும் காட்டுப்பகுதியில் உல்லாசம் அனுபவித்து கொண்டிருந்தபோது வந்த மர்ம ஆசாமி பூபதிகண்ணனை கத்தியால் சரமாரியாக குத்திக்கொலை செய்து விட்டு சென்றதாகவும், தான் தப்பித்து ஓடிவந்து விட்டதாகவும் கூறினார். தனக்கும், கொலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று சொன்னதையே திரும்ப திரும்ப சவுந்தர்யா கூறி வந்தார். அத்துடன் பூபதிகண்ணனின் மனைவி அனுராதாவுக்கு தங்களது கள்ளக்காதல் விவரம் தெரியும் என்றும், இதுகுறித்து ஏற்கனவே அவர் கண்டித்ததாகவும் கூறினார்.
கடந்த 5 நாட்கள் போலீசார் சவுந்தர்யாவிடம் விசாரணை நடத்தியபோதிலும் கள்ளத்தொடர்பை ஒப்புக்கொண்ட அவர், கொலைக்கான காரணம் தெரியாது என்றும், கொலைக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் மறுத்தே வந்தார். இதனால், கொலைக்கு வேறு ஏதாவது காரணம் இருக்கலாமா? என்றும், கூலிப்படையை ஏவி விரோதம் காரணமாக பூபதிகண்ணனை யாரேனும் கொலை செய்திருக்கலாமா? என்றும் தொடர்ந்து போலீசார் விசாரணையை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கைது செய்யப்பட்ட சவுந்தர்யா, கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். நேற்று காலை கீரனூர் நீதித்துறை நடுவர் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு பாரதிராஜன் முன்னிலையில் சவுந்தர்யா ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டதைத்தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் சவுந்தர்யா நேற்று திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் கொலையான பூபதிகண்ணனின் இறுதிச்சடங்குகள் முடிந்து அவரது மனைவி அனுராதா திருச்சிக்கு திரும்பி விட்டார். அடுத்த கட்டமாக கணவரின் கொலை தொடர்பாக அனுராதாவிடம் விசாரணை நடத்தப்படுவதுடன், சந்தேகப்படும் நபர்கள் யாரேனும் உள்ளனரா? என்ற தகவல்களை திரட்டவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Related Tags :
Next Story