ஆட்சி மாறியது...! காட்சி மாறுமா?
அண்மையில் நடந்து முடிந்த பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல், இது வரை இல்லாத வகையில் பல புதுமையான முடிவுகளைத் தந்திருக்கிறது.
ஒன்று எந்தக் கட்சிக்கும் ஆட்சியமைக்கும் பெரும்பான்மை இல்லை. இரண்டாவதாக இம்ரான்கான் என்ற புதிய தலைமையை பாகிஸ்தான் மட்டுமல்ல உலக நாடுகள் எதிர்கொள்ளப் போகின்றன. பாகிஸ்தான் அரசியலில் பெனாசிர் பூட்டோ, நவாஸ் ஷெரீப் போன்ற ஆளுமைகள் கோலோச்சிய பிறகு ஏறத்தாழ 22 ஆண்டுகளுக்கு முன்பு விளையாட்டாக அரசியலில் நுழைந்த கிரிக்கெட் வீரர் இம்ரான்கானுக்கு தனிப்பட்ட நிலையில் ஆட்சியமைக்கும் வாய்ப்பு நூலிழையில் தவறினாலும் சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சியில் பிரதமராகும் வாய்ப்பு பிரகாசமாயிருப்பது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதையும் தாண்டி இம்ரான்கானின் தலைமை பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகளில் எத்தகைய புரிதலை ஏற்படுத்தப் போகிறது? அதனூடான விளைவுகள் சர்வதேச அரங்கில் எவ்வகையான மாற்றத்தை அல்லது தாக்கத்தை முன்னெடுக்கும் என்பன போன்றவை மில்லியன் டாலர் வினாக்களாகவே உள்ளன.
தேர்தல் பிரசாரத்தின் போது இந்தியா பாகிஸ்தான் உறவில் சுமூகமான சூழல் ஏற்படாததற்கு காரணம் பிரதமர் மோடியின் தீவிர பாகிஸ்தான் எதிர்ப்பு கொள்கை தான் என குற்றம் சாட்டினார் இம்ரான்கான். ஆனால் ஒரு வேளை நாங்கள் ஆட்சியமைத்தால் இந்தியாவுடன் சுமூகமான மற்றும் மனப்பூர்வமான உறவையே விரும்புகிறோம் என்றும் கூறுகிறார்.வெற்றி பெற்றவுடன் எனது முதல் கனவு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்குமிடையே நீண்ட காலமாக பனிப்போராகக் கருதப்படும் காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பது தான் என்று முன்னுக்குப் பின் முரணாகப் பிதற்றி வருகிறார்.
இம்ரான்கானின் சொல்லும் செயலும் வெறும் கண்துடைப்பு நாடகமாகி கானல் நீராகத்தான் அமையுமே தவிர எந்தவொரு நேர்மறை விளைவையும் பிரதிபலிக்கப்போவதில்லை. இது உலகை ஏமாற்றுகின்ற பெயரளவிலான தந்திரமே அன்றி நடைமுறைக்குச் சாத்தியமற்ற ஒன்று. காரணம் பாகிஸ்தானால் விட்டொழிக்க முடியாத தொடர் பயங்கரவாதம், புவிசார் அரசியல் கூறுகள் மற்றும் அரசியலால் கட்டமைக்கப்பட்ட வரலாற்றுப் பிழைகள் எனப் பலவற்றைக் கூறலாம்.
இந்தியா - பாகிஸ்தான் உறவில் ஒட்ட முடியாத விரிசலை ஏற்படுத்தியிருப்பது பயங்கரவாதமாகும். பயங்கரவாத அமைப்புகளை அழித்தொழிப்பது. இந்தியாவின் சார்பில் முன் வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு பாகிஸ்தான் பிரதமர்கள் மற்றும் அதிகாரவர்க்கத்தினர் பெயரளவில் ஆதரவாகப் பேசினாலும் ராணுவ தளபதிகள் உள்ளிட்ட இதர அதிகாரிகள் அதைக் கண்டுகொள்வதே இல்லை.
பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில் அதன் ராணுவத்திற்கு முக்கியப் பங்கு உண்டு. மோசமான அரசியல் மற்றும் ஊழல் நிறைந்த ஆட்சி நிர்வாகம் காரணமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எப்பொழுதெல்லாம் வீழ்த்தப்படுகிறதோ அப்போது ராணுவத்தின் கை ஓங்கி ராணுவ ஆட்சி நடைபெறும். வல்லரசு நாடுகளின் கைப்பாவையாகவே பாகிஸ்தான் ராணுவமும் செயல்படும். ராணுவமே ஆயுத விற்பனைக்காக மறைமுகமாகத் பயங்கரவாதப் போக்கினை ஊக்குவிக்கும். ராணுவ பலத்தின் மூலமே பாகிஸ்தான் அரசியல் நிர்ணயிக்கப்படுகிறது. இதற்கு அமெரிக்கா போன்ற நாடுகள் சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கின்றன. இந்தப் பின்னணியில் சிறுசிறு கட்சிகளின் ஆதரவு இருப்பினும் ராணுவத்தின் துணையின்றி இம்ரான்கானால் ஆட்சி அமைக்க முடியாது. ஒரு வேளை ராணுவ உதவியுடன் ஆட்சி அமையும்பட்சத்தில் இம்ரானின் ஆட்சி ராணுவத்தின் தலையாட்டி பொம்மை ஆட்சியாகத்தான் இருக்கும். எனவே இந்தியாவுடன் சுமூக உறவு என்ற இம்ரானின் முழக்கம் சாத்தியமற்ற ஒன்றாகும்.
இரண்டாவதாக புவிசார் அரசியல் கூறுகளை உற்று நோக்கினால் அனைத்து தளங்களிலும் சீனாவுடனான பாகிஸ்தானின் ஒட்டும் உறவும் இந்தியாவிற்குப் பாதகமாகவே அமைகிறது. பாகிஸ்தான் பொருளாதாரம் உச்சத்தை தொடுவதற்கு சீனா தயக்கமின்றி அனைத்து வழிகளிலும் உதவி வருகிறது. சீனா பாகிஸ்தான் பொருளாதார நடைபாதை என்ற வகையில் பொருளாதார மேம்பாட்டிற்கான தொடக்க முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இதற்கு இந்தியா தன் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் ராணுவத் துணையுடன் புதிதாக அமையும் இம்ரான் அரசு இம்முயற்சிக்கு முழுவதும் துணை நிற்க வேண்டும் என்ற ராணுவத்தின் பெரும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய நெருக்கடியில் சிக்கியுள்ளது. ஒரு வேளை மறுக்கும் பட்சத்தில் ராணுவம் அரசிற்கு போதுமான அழுத்தமும் தரத் தயாராக உள்ளது. இம்ரான் பாகிஸ்தான் ராணுவத்தைப் பகைத்துக் கொண்டு ஆட்சியில் நீடிக்கவும் இயலாது. இப்படிப்பட்ட சூழல் கைதியாகப் பொறுப்பேற்கவுள்ள புதிய அரசு இந்தியாவுடனான உறவுகளில் எப்படி நெருக்கத்தை ஏற்படுத்திட முடியும்.
இரு நாடுகளுக்கிடையிலான ராஜதந்திர நடவடிக்கைகளில் எப்படி புதிய பரிமாணத்தை வெளிப்படுத்த இயலும். ஆக இம்ரானின் சுமூக உறவு பேச்சு என்பது சர்வதேச சமூகத்தை நம்ப வைக்கும் ஒரு மாயை என்பது வெட்ட வெளிச்சமாகிறது.
இரு நாடுகள் சுதந்திரம் அடைந்த காலந்தொட்டு தீராத பிரச்சினையாக உள்ள காஷ்மீர்எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஆகியவற்றால் உள்நாட்டு கலவரம், துப்பாக்கிச்சூடு, போர் தவிர்க்க முடியாததாகிப் போனதால் உறவில் எந்த வித குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் மாற்றமும் ஏற்படவில்லை என்பது நிதர்சனமான உண்மை. இரு நாடுகளும் ஒப்புக் கொண்டாலும் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் இந்தியா பாகிஸ்தான் உறவில் ஒன்று மட்டும் மாறவேயில்லை. இந்தியாவின் எதிர்பார்ப்பு பயங்கரவாதத்தை ஒடுக்குவது. பாகிஸ்தானின் தேவை காஷ்மீரில் இம்ரானின் பார்வையில் அரிய மாற்றங்கள் எதுவும் தென்படாததால் இரு நாடுகளின் உறவில் எந்த முன்னேற்றத்தையும் சாதிக்க முடியாது என இந்தியா திடமாக நம்புகிறது. பாகிஸ்தானில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறுவதேயில்லை.
- முனைவர் சு. பார்த்திபன், உதவிப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம்.

Related Tags :
Next Story