பட்டூரில் டிரைவர் கொலை வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது


பட்டூரில் டிரைவர் கொலை வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது
x
தினத்தந்தி 6 Aug 2018 3:30 AM IST (Updated: 6 Aug 2018 1:39 AM IST)
t-max-icont-min-icon

மேலூர் அருகே டிரைவர் கொலை வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மேலூர்,

மேலூர் அருகே மேலவளவு போலீஸ் சரகத்தில் உள்ளது பட்டூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவருடைய மகன் சபரீஸ்வரன் (வயது21). டிராக்டர் டிரைவரான இவரை கடந்த மாதம் மர்ம கும்பல் தாக்கி கொலை செய்தது. இதுகுறித்து மேலவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்திரவின்படி போலீசார் தீவிர தேடுதலில் மேட்டுப்பட்டியை சேர்ந்த சரவணன் என்ற சீமான் (22), பட்டூரை சேர்ந்த திவ்யபிரகாஷ்(22), மற்றும் பட்டூரை சேர்ந்த குணபாலன் (25) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர்.

 இந்நிலையில் தனக்கம்பட்டியை சேர்ந்த சரண்ராஜ் (20) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்துகொலை வழக்கில் இதுவரை 4 பேர் கைதாகி உள்ளனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story