கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: அணைக்குடி பகுதி பொதுமக்கள் அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்


கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: அணைக்குடி பகுதி பொதுமக்கள் அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்
x
தினத்தந்தி 19 Aug 2018 4:00 AM IST (Updated: 19 Aug 2018 1:08 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் கடந்த 5 நாட்களாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் வருவாய் துறையினரால் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் கடந்த 5 நாட்களாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் வருவாய் துறையினரால் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் ஆற்றில் நீர் வரத்து மேலும் அதிகமானது. இதனால் முட்டுவாஞ்சேரி கிராமம் அருகில் தாழ்வான பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. மேலும் அப்பகுதியில் சோளம், நெல் பயிரிட்டுள்ள வயல்கள், பள்ளி, கோவில்களில் தண்ணீர் சூழ்ந்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்களை ஸ்ரீபுரந்தான் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு அதிகாரிகள் நேற்று அழைத்து சென்று தங்க வைத்தனர். இதில் சிலர் தங்களது உறவினர் வீட்டிற்கு சென்றனர். சிலர் செல்ல மனமின்றி சாலையில் நின்றனர். மேலும் அதிகாரிகள், போலீசாரும் தொடர்ந்து அப்பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Next Story