சாமி சிலைகளை பாதுகாக்க கோரி கோவில் உண்டியலில் மனுக்களை போட்டு நூதன போராட்டம்
சாமி சிலைகளை பாதுகாக்க கோரி கோவில் உண்டியலில் மனுக்களை போட்டு இந்து முன்னணியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமயபுரம்,
தமிழகத்தில் உள்ள சில கோவில்களில் பழங்கால சிலைகள் திருடி கடத்தப்பட்டது, சில கோவில்களில் போலியான சாமி சிலைகள் வைக்கப்பட்டுள்ளது உள்ளிட்டவை குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கோவில் சொத்துக்களை காக்க வேண்டும். கோவிலில் உள்ள சாமி சிலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், கோரிக்கை மனுக்கள் எழுதி கோவில்களில் உள்ள உண்டியல்களில் போடும் நூதன போராட்டத்தில் இந்து முன்னணியினர் நேற்று ஈடுபட்டனர். போராட்டத்திற்கு இந்து முன்னணி மாநில தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். இதில் மனுக்களை எழுதி திருப்பட்டூரில் உள்ள பிரம்மபூரீஸ்வரர் கோவில் உண்டியலில் போட்டனர்.
இதேபோல் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு இந்து முன்னணியினர் வந்து அம்மனை தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து அரியலூர் மாவட்ட தலைவர் திருமூர்த்தி தலைமையில் இந்து முன்னணியினர் மனுக்களை உண்டியலில் போட்டனர். இந்த நூதனப் போராட்டத்தில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த இந்து முன்னணியினர் திரளாக கலந்து கொண்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேலன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் அகிலன், தர்மலிங்கம் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story