குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு 25 லாரிகளில் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டன
குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு 25 லாரிகளில் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நாகர்கோவில்,
கேரள மாநிலத்தில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளையும், உடமைகளையும் இழந்து பரிதவிக்கிறார்கள். இதைத் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு இடங்களில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பப்படுகின்றன.
இதே போல குமரி மாவட்டத்தில் இருந்தும் நேற்று முன்தினம் அதிகாலையில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. காய்கறிகள், கிழங்குகள், அரிசி, மருந்துகள், மாவு, பிஸ்கெட், பால், சாக்லெட், சேலை, வேட்டி, போர்வை, பேன்ட், தண்ணீர் பாட்டில்கள், பழ வகைகள் உள்ளிட்ட பொருட்கள் நிவாரணமாக அனுப்பப்படுகிறது.
இந்த நிவாரண பொருட்களை தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் தாங்களாக முன் வந்து வழங்கி வருகிறார்கள். மக்கள் அனுப்பி வைக்கும் பொருட்கள் அனைத்தும் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நாஞ்சில் கூட்டரங்கில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. பின்னர் அவற்றை தனித்தனியாக பிரித்து பார்சல் செய்து லாரிகள் மூலம் கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது.
நிவாரண பொருட்கள் அனுப்பும் பணி நேற்று 2-வது நாளாக நடந்தது. நேற்றும் ஏராளமான பொருட்கள் குவிந்தன. அரிசிகள் டன் கணக்கில் குவிந்துள்ளன. மேலும் பல லட்சம் மதிப்பிலான மருந்துகளும் வந்துள்ளன. குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் இருந்து இந்த மருந்துகள் அனுப்பப்பட்டது. மேலும் வடிவீஸ்வரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி சார்பில் பள்ளியில் படிக்கும் சிறுவர்-சிறுமிகள் வந்து நிவாரண பொருட்களை வழங்கினர்.
அதோடு குடிநீர் பாட்டில்கள் கணக்கிட முடியாத அளவுக்கு வந்துள்ளன. அவற்றை நாஞ்சில் கூட்டரங்கில் வைக்க இடமில்லாமல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் காத்திருக்கும் பகுதியில் குவித்து வைக்கப்பட்டன. மேலும் ஏராளமான லாரிகள் குடிநீர் பாட்டில்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நேற்று காலை நிலவரப்படி மொத்தம் 25 லாரிகள் மூலமாக நிவாரண பொருட்கள் கேரள மாநிலத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இந்த தகவலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இருப்பினும் கேரளாவுக்கு அனுப்புவதற்காக குமரி கலெக்டர் அலுவலகத்தில் நிவாரண பொருட்கள் இன்னும் குவிகின்றன.
கலெக்டர் அலுவலக பணியாளர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை பார்சல் செய்து வருகிறார்கள்.

Related Tags :
Next Story