அரசு ஊழியர் சங்கத்தினர் மனித சங்கிலி போராட்டம்


அரசு ஊழியர் சங்கத்தினர் மனித சங்கிலி போராட்டம்
x
தினத்தந்தி 22 Aug 2018 4:15 AM IST (Updated: 22 Aug 2018 2:44 AM IST)
t-max-icont-min-icon

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மனித சங்கிலி பேராட்டம் நடந்தது.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் வெங்கடேசபுரம் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து தொடங்கி நடந்தது. தமிழக அரசு ஊழியர்கள், இளைஞர்களின் வாழ்வுரிமையை பறிக்கும் வகையில் உள்ள அரசாணை–56 ஐ உடனே ரத்து செய்ய வேண்டும். முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆதிசே‌ஷய்யா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பணியாளர் சீரமைப்பு குழுவை கலைக்க வேண்டும். மதிப்பு ஊதியம், தொகுப்பு ஊதியம், வரையறுக்கப்படாத காலமுறை ஊதியம், ஒப்பந்த பணி நியமனம், தினக்கூலி முறை, அவுட்சோர்சிங் முறைகளை ரத்து செய்யவேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மனித சங்கிலி பேராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் தயாளன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குமரிஅனந்தன் விளக்க உரையாற்றினார். மாநில செயலாளர் பெரியசாமி மனித சங்கிலி போராட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இதில் முன்னாள் மாவட்ட தலைவர் ஆளவந்தார். சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர்கள் இளங்கோவன், செல்வபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட தணிக்கையாளர் ராஜராஜன் நன்றி கூறினார்.


Next Story