வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தண்ணீர் திறக்க கோரி முதல்–அமைச்சரிடம் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் மனு


வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தண்ணீர் திறக்க கோரி முதல்–அமைச்சரிடம் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் மனு
x
தினத்தந்தி 26 Aug 2018 4:00 AM IST (Updated: 25 Aug 2018 10:50 PM IST)
t-max-icont-min-icon

வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி முதல்–அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தார்.

பரமக்குடி,

ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவமழை பொய்த்ததால் விவசாயம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் நஷ்டத்தில் உள்ளனர். மேலும் மக்களுக்கு தேவையான குடிநீர் கிடைக்காமல் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர்.

 எனவே மக்களின் நலன் கருதியும், விவசாயத்தை பாதுகாக்கவும், குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும் வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தார்.

 இந்த மனுவை பெற்றுக்கொண்ட முதல்–அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.


Next Story