மண் கடத்தலை தட்டிக்கேட்ட இளைஞர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த அ.தி.மு.க. பிரமுகர்
மண் கடத்தலை தட்டிக்கேட்ட இளைஞர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த அ.தி.மு.க. பிரமுகர் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவும் வீடியோவால் பரபரப்பு.
லாலாப்பேட்டை,
லாலாப்பேட்டை அருகே உள்ள பஞ்சப்பட்டி ஏரியில் நேற்று முன்தினம் இரவு சிலர் ஒரு டிராக்டரில் மண் ஏற்றிக்கொண்டு இருந்தனர். இதனை அறிந்த அப்பகுதி இளைஞர்கள் அங்கு ஒன்று திரண்டு மண் அள்ளி கடத்த முயன்றவர்களிடம் தட்டிக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மண் கடத்தலில் ஈடுபட்ட அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர், இளைஞர்களிடம் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில் பஞ்சப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் பிரபு, பஞ்சப்பட்டி ஏரியில் இருந்து சிலர் மண் கடத்துவதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் லாலாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் லாலாப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story