மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் பிணம்: கொலையா? போலீஸ் விசாரணை
பாலியல் புகாரில் சிக்கிய கல்லூரி அருகே மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் பிணம் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணாபுரம்,
திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள வாழவச்சனூர் அந்தோணியார்புரத்தை சேர்ந்தவர் சேகர், தொழிலாளி. இவரது மனைவி ராணி (வயது 28). இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை ராணி அதே பகுதியில் உள்ள ஒரு மரத்தில் உயரமான இடத்தில் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார்.
இதைகண்ட அக்கம்பக்கத்தினர் வாணாபுரம் போலீசாருக்கும், ராணியின் கணவர் சேகருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் ராணியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதைத்தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுபா மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு, ராணியின் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கணவன்- மனைவி இருவரும் குடும்ப பிரச்சினை காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவது தெரிய வந்தது. எனவே குடும்ப பிரச்சினையில் ராணி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது அவரை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டார்களா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் நடைபெற்ற இடத்தின் அருகில் தான், மாணவி பாலியல் குற்றச்சாட்டு கூறிய வாழவச்சனூர் வேளாண்மை கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் அருகில் பெண் தூக்கில் பிணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story