மகனை கொலை செய்த தந்தை கைது


மகனை கொலை செய்த தந்தை கைது
x
தினத்தந்தி 26 Aug 2018 4:09 AM IST (Updated: 26 Aug 2018 4:09 AM IST)
t-max-icont-min-icon

டோங்கிரியில் மகனை கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டார்.

மும்பை,

மும்பை டோங்கிரி பகுதியை சேர்ந்தவர் சலீம். இவரது மகன் இப்ராகிம். நேற்று முன்தினம் இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சலீம், மகன் இப்ராகிமை சரமாரியாக தாக்கினார். படுகாயமடைந்த இப்ராகிம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் சலீம் மோட்டார் சைக்கிளில் தப்பி செல்ல முயன்றார்.

எனினும் போலீசார் அவரை துரத்தி பிடித்து கைது செய்தனர். மேலும் கொலை செய்யப்பட்ட இப்ராகிம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சலீம் எதற்காக மகனை கொலை செய்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story