ரூ.44 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மேலாளர் கைது
ஷோரூம் உரிமையாளரிடம் ரூ.44 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மேலாளர் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
இதுகுறித்து நித்திஷ் சாக்கிநாக்கா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அமித் சிங்கை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை சாக்கிநாக்கா பகுதியில் நித்திஷ் என்பவர் மோட்டார் சைக்கிள் ஷோரூம் நடத்தி வருகிறார். இந்த ஷோரூமில் அமித் சிங் என்பவர் மேலாளராக பணியாற்றி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் நித்திஷ் ஷோரூம் கணக்குகளை சரிபார்த்தார்.
அப்போது மோட்டார் சைக்கிள்கள் விற்றதில் ரூ.44 லட்சம் முறைகேடு செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. விசாரணையில், அமித் சிங் மோட்டார் சைக்கிள்களை விற்று வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்கிய பணத்தை ஷோரூம் வங்கி கணக்கில் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து நித்திஷ் சாக்கிநாக்கா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அமித் சிங்கை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story