மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 28,500 கனஅடியாக அதிகரிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் பலத்த மழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 28 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரித்து உள்ளது. விடுமுறை நாளான நேற்று ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
மேட்டூர்,
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இதன் காரணமாக 2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது.
இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. 2 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்தது. இதற்கிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பும் குறைந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து மீண்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. நேற்று நீர்வரத்து மேலும் அதிகரித்தது.
அதன்படி ஒகேனக்கல்லுக்கு நேற்று காலை வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. மாலை 6 மணிக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. நேற்று விடுமுறை தினம் என்பதால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். தொடர்ந்து மெயின் அருவி, சினிபால்சில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் காவிரி கரையோர பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனர். நேற்றும் தொடர்ந்து பரிசல்கள் இயக்கப்பட்டன.
பரிசல்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் சவாரி செய்து காவிரியின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 20 ஆயிரத்து 742 கனஅடி வந்து கொண்டு இருந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 120.01 அடியாக இருந்தது. அணையில் இருந்து 25 ஆயிரத்து 800 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று இரவு வினாடிக்கு 28 ஆயிரத்து 500 கனஅடியாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் வினாடிக்கு 28 ஆயிரத்து 500 கன அடியாக அப்படியே வெளியேற்றப்பட்டது.
அணையை ஒட்டி அமைந்து உள்ள நீர்மின்நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22 ஆயிரத்து 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. வினாடிக்கு 5 ஆயிரத்து 200 கனஅடி தண்ணீர் அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக திறந்து விடப்பட்டது. கால்வாய் பாசனத்துக்காக வழக்கம் போல் வினாடிக்கு 800 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப் படுகிறது.
16 கண் பாலம் வழியாக 3 நாட்கள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் உபரிநீர் வெளியேறுவதை பார்த்து ரசித்து செல்கின்றனர். மேலும் அணையில் கடல்போல் தேங்கி நிற்கும் தண்ணீரின் அழகையும் கண்டு ரசித்தனர். 16 கண் பாலம் வழியாக திறந்து விடப்படும் உபரிநீர் வழிந்தோடும் பாதையில் ஆங்காங்கே குட்டை போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேட்டூர் அனல் மின்நிலையம் அருகே உபரிநீர் செல்லும் பாதையில் ஆங்காங்கே மீன்குஞ்சுகள் செத்து மிதக்கின்றன. இது குறித்து தகவல் அறிந்ததும் மீன்வளத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

Related Tags :
Next Story