உளுந்தூர்பேட்டை அருகே சத்துணவு பொறுப்பாளர் தற்கொலை, போலீஸ் விசாரணை
உளுந்தூர்பேட்டை அருகே சத்துணவு பொறுப்பாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வ.சின்னகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி புஷ்பா(வயது 28). இவர் அதேஊரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சத்துணவு பொறுப்பாளராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று புஷ்பா வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி புஷ்பா நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தாய் பார்வதி திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து புஷ்பா உடல்நலக் கோளாறு காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா? என விசாரித்து வருகிறார்கள்.