மாவட்ட செய்திகள்

பருவமழை பெய்யாததால் வறண்டு கிடக்கும் விசுவகுடி அணை + "||" + Dissolving Visual Dam Dam due to monsoon

பருவமழை பெய்யாததால் வறண்டு கிடக்கும் விசுவகுடி அணை

பருவமழை பெய்யாததால் வறண்டு கிடக்கும் விசுவகுடி அணை
பெரம்பலூர் மாவட்டத்தில் பருவமழை பெய்யாததால் விசுவகுடி அணை ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் வறண்டு போய் காணப்படுகிறது.
வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள விசுவகுடி கல்லாறு ஓடையின் குறுக்கே பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார துறையின் மூலமாக செம்மலை, பச்சைமலை ஆகிய மலைகளின் இடையே மலைப்பகுதியில் பெய்யும் மழை நீரை வீணாகாமல் தடுத்து விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு பயன்படுத்தும் வகையில் ரூ.36.37 கோடி மதிப்பீட்டில் 36 அடி உயரம் மற்றும் 665 மீட்டர் நீளமுள்ள கரையுடன் கூடிய புதிய விசுவகுடி அணை 2015-ம் ஆண்டு கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இது பெரம்பலூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஒரே அணையாகும். இந்த அணையானது 30.67 மில்லியன் கனஅடி நீரை 10.30 மீட்டர் ஆழத்திற்கு சேமிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இந்த அணை திறக்கப்பட்ட 2015 -ம் ஆண்டு அதன் முழு கொள்ளளவை எட்டியது. அதன் பிறகு கடந்த ஆண்டு பெய்த பருவ மழையின் போது 22 அடி உயரம் மட்டுமே தண்ணீர் நிரம்பியது. அதன் பிறகு கடந்த பல மாதங்களாக போதிய பருவ மழை பெய்யாததால் அணையிலிருந்த தண்ணீர் முழுவதுமாக வற்றி தற்போது வறண்டு காணப்படுகிறது.


மேலும் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளதால் கிணற்று பாசனம் மூலம் பயிர் செய்யக்கூடிய விவசாயிகளும் தண்ணீர் இல்லாமல் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது மானாவாரி நிலத்தில் பருத்தி, மக்காச் சோளம், ஆமணக்கு, துவரை போன்ற விதைகளை விதைப்பதற்காக பலர் தங்களது நிலங்களை உழவு செய்து தயார் நிலையில் மழைக்காக காத்துக் கிடக்கின்றனர்.

அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவிலும், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், காவிரி கரையோர மாவட்டங்களிலும் ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடும் நிலையில், பெரம்பலூரில் அணை, ஏரி, மற்றும் குளங்களில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் வறண்டு கிடப்பது விவசாயிகளையும், பொதுமக்களையும் மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம்: பிரதமருக்கு 1 லட்சம் தபால் கார்டுகள் அனுப்பும் விவசாயிகள் மாணவர்களும் பங்கேற்பு
மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம் தொடர்பாக மாணவர்களுடன் இணைந்து விவசாயிகள் பிரதமருக்கு 1 லட்சம் தபால் கார்டுகளை அனுப்பி வருகின்றனர்.
2. தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தில் பிளவு புதிய அமைப்பு திருச்சியில் உதயம்
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தில் பிளவு ஏற்பட்டு திருச்சியில் புதிய சங்கம் உருவாகி உள்ளது.
3. திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் புதிய கதவணை கட்டும் பணியை 2 ஆண்டுகளில் முடிக்க திட்டம்
திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் புதிய கதவணை கட்டும் பணியை 2 ஆண்டுகளில் முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். முதல்முறையாக 55 தானியங்கி மதகுகள் அமைக்கப்படுகிறது.
4. மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகத்திற்கு அளித்த அனுமதியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் - சரத்குமார் பேட்டி
மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகத்திற்கு அளித்த அனுமதியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறினார்.
5. கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாணவ-மாணவிகளுக்கு புதிய பாடப்புத்தகங்கள் அமைச்சர் வழங்கினார்
தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டு, பள்ளி பாடப்புத்தகங்களை இழந்த மாணவ-மாணவிகளுக்கு புதிய பாடப்புத்தகங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.