கோவில்களில் அடுத்தடுத்து கொள்ளை: கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளாவுக்கு விரைந்தனர்
குமரி மாவட்டத்தில் கோவில்களில் அடுத்தடுத்து கொள்ளையடித்தவர்கள் கேரளாவை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளாவுக்கு சென்றனர்.
குழித்துறை,
மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சியில் மகாதேவர் கோவில் உள்ளது. இந்த கோவில் குமரி மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க 12 சிவாலயங்களில் 2-வது சிவாலயம் ஆகும்.
இந்த கோவிலில் கடந்த 31-ந் தேதி இரவு மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து, கருவறையில் இருந்த மகாதேவர் சிலை உள்பட 3 சாமி சிலைகள் மற்றும் சாமிக்கு அணிவிக்கப்படும் தங்க நகைகள், உண்டியல் பணம் போன்றவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
அதே நாளில் அருகில் உள்ள தேவி கோவிலில் கொள்ளையர்கள் புகுந்து சிலை, நகை போன்றவற்றை கொள்ளையடித்தனர்.
இந்த சம்பவங்கள் குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், கொள்ளையர்களை பிடிக்க மார்த்தாண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தரலிங்கம், விஜயன் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது.
இதற்கிடையே கருங்கல் அருகே கம்பிளாரில் உள்ள சங்கரநாராயணர் குளத்து மகாதேவர் கோவிலில் நகைகள், காணிக்கை பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. அடுத்தடுத்து நடந்த இந்த கொள்ளை சம்பவங்கள் குமரி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.
இந்த கொள்ளைகளில் கேரளாவை சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது. இதையடுத்து தனிப்படை போலீசார் கேரளாவுக்கு விரைந்து உள்ளனர்.
அவர்கள் கேரளாவில் பாறசாலை, நெய்யாற்றங்கரை, திருவனந்தபுரம் போன்ற போலீஸ் நிலையங்களில் உள்ள பழைய குற்றவாளிகளின் பட்டியல்களை சேகரித்து அவர்களுக்கும், தற்போது நடந்துள்ள கொள்ளைக்கும் தொடர்பு உண்டா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story