நாகர்கோவிலில் மத்திய–மாநில அரசுகளை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்தும், தூத்துக்குடி சோபியா கைது செய்யப்பட்டதை கண்டித்தும் முற்போக்கு வக்கீல்கள் அமைப்பு சார்பில் நாகர்கோவில் கோர்ட்டு முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாகர்கோவில்,
மத்திய, மாநில அரசுகளின் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை கண்டித்தும், வக்கீல்கள், கல்வியாளர்கள், சமூக செயல்பாட்டாளர்களை ஒடுக்கும் விதமான மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்தும், தூத்துக்குடி சோபியா கைது செய்யப்பட்டதை கண்டித்தும் முற்போக்கு வக்கீல்கள் அமைப்பு சார்பில் நாகர்கோவில் கோர்ட்டு முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த மூத்த வக்கீல் செலஸ்டின் தலைமை தாங்கினார். மூத்த வக்கீல் ராஜகுஞ்சரம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணைச்செயலாளர் இளவரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகரக்குழு உறுப்பினர் மரிய ஸ்டீபன், அகில இந்திய வக்கீல் சங்க தலைவர் பாலசுப்பிரமணியம், துணைத்தலைவர் அனிட்டர் ஆல்வின், திராவிடர் விடுதலை கழக மாவட்ட தலைவர் சதா, மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் சிவராஜபூபதி, வக்கீல் ஆனந்த் செல்லராம் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Related Tags :
Next Story